Net Neutrality – நினைவிருக்கிறதா? போன பிப்ரவரி மாதத்தில் ட்ராய்
(Trai) இந்தியாவில் இணைய சமநிலை இருக்கும் என்ற முக்கியமான முடிவெடுத்தது.
இப்போது இணைய சமநிலை என்றால் என்ன என்று சுருக்கமாக பார்ப்போம்…
நாம் பலவித வெப்சைட்டுகளை பார்க்கிறோம். நமக்கு இணைய கனெக்ஷனை வழங்கும் சர்வீஸ்
ப்ரோவைடர்கள் அனைத்து வெப்சைட்டுகளையும் சீரான வேகத்திலே, பாரபட்சமின்றி தருகிறார்கள்.
இதுதான் இணைய சமநிலை. அப்படி சமநிலை இல்லையென்றால், சர்வீஸ் புரோவைடர்கள் பணம்
வாங்கி கொண்டு, சில வெப்சைட்டுகளுக்கு மட்டும் வேகத்தை கூட்டலாம்… மற்றவர்களுக்கு
வேகத்தை குறைக்கலாம்.
வேறு விதமாக சொன்னால் – உங்கள் கேபிள் டி.வி ஆபரேட்டர் சன்நியூஸ்
மட்டுமோ, அல்லது ஜெயா நியூஸ் மட்டுமோ காட்டினால் உங்களுக்கு எவ்வளவு கடுப்பாக
இருக்கும்…? உங்களால் உண்மையான செய்தியை அறியவே முடியாதல்லவா? அது போலத்தான்….
இணைய சமநிலை இல்லாவிட்டால் உங்களால் இணையத்தில் எதையுமே அறிந்து கொள்ளமுடியாத நிலை
உண்டாகும். இப்போது விஷயத்தை பார்ப்போம்.
ட்ரம்ப் வென்றபின்னர் அமெரிக்க அரசு, முந்தைய அரசு எடுத்திருந்த
முக்கியமான முடிவுகளை மாற்றி கொண்டிருக்கிறது. இதற்கு இணைய சமநிலையும்
விலக்கில்லை.
இந்தியாவிற்கு முன்னதாகவே அமெரிக்கா 2015ல் இணைய சமநிலை
இருக்கவேண்டும் என்று சொல்லியிருந்தது. ட்ரம்ப் வென்றபின்னர் இந்திய-அமெரிக்கரான
அஜித் பாய் (Ajith Pai) FCC தலைவரானார். (Federal Communications Commission – நம்
ஊர் Trai-ஐ விட பெரிய அமைப்பு). அஜித் பாய் எப்போதுமே இணைய சமநிலைக்கு எதிரானவர்.
இப்போது அவர் ‘இணைய சமநிலை கூடாது…. அது சந்தை போட்டியை
வளர்க்கவில்லை… முதலீடுகளை ஈர்க்கவில்லை’ என்று காரணம் கூறி சமநிலையை நீக்க
கோருகிறார். FCC இது குறித்து டிசம்பர் 14ம் தேதி முடிவெடுக்க போகிறது.
அமெரிக்க டெக்னாலஜி துறை இரண்டாக பிரிந்து கிடக்கிறது…. பலர்
சமநிலைக்கு ஆதரவாக இருக்க, AT&T, Verizon போன்றவர்கள் இணைய சமநிலை வேண்டாம்
என்கிறார்கள். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்தியாவில் Free Basics என்ற
பெயரிலே இணைய சமநிலைக்கு எதிராக களமிறங்கிய பேஸ்புக், அமெரிக்காவிலே சமநிலை
வேண்டும் என்கிறது…. இரட்டை நிலைப்பாடு. மார்க் பெரிய அரசியல்வாதியாக வருவார் என
எதிர்பார்க்கலாம்.
உண்மையில் இணைய சமநிலைதான் போட்டியை வளர்க்க சமமான களம் அமைத்து
தருகிறது… முதலீடுகளை ஈர்க்கிறது. இந்த காரணங்களுக்காகத்தான் இந்தியா சமநிலையை
தேர்ந்தெடுத்தது. ஆனால் அஜித் பாய் சரியான காரணங்களை கூறி தவறான முடிவெடுக்க
துடிக்கிறார்.
எப்போதுமே அமெரிக்கா ஒரு டிரெண்ட் செட்டர்… இப்போது அமெரிக்கா
சமநிலைக்கு எதிரான முடிவெடுத்தால் பல நாடுகள் அமெரிக்காவை தொடரும். ஆக, FCC ஒரு
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுக்கப்போகிறது. All eyes on FCC…
No comments:
Post a Comment