பிட் காயின் மதிப்பு முதன் முறையாக 10000 அமெரிக்க டாலர்களை
தாண்டியுள்ளது. இந்த ஆண்டு மட்டும் அதன் மதிப்பு 14 மடங்கு ஏறிவிட்டது. Futures
& Derivatives சந்தைகளை நடத்தும் CME Group பிட் காயினுக்கு சந்தை ஒன்றை
ஆரம்பிக்க போவதாக சொன்னதிலிருந்து அதன் விலை விஷம் போல ஏறி வருகிறது (50% ஏறிவிட்டது).
Traditional investors எனப்படும் மியுச்சுவல் பண்டுகள்,
ரிடயர்மெண்ட் பண்டுகள் போன்றவை இந்த பிட்காயினில் முதலீடு செய்வதில்லை. காரணம்,
மத்திய வங்கிகள் பிட்காயினை ஏற்று கொள்வதில்லை. அதோடு பிட்காயினில் ரிஸ்க் மிக
அதிகம்.
உதாரணம் - 2014ல் உலகின் மிகப்பெரிய பிட்காயின் சந்தை MtGox
என்னும் ஜப்பானிய சந்தை. அதன் பாதுகாப்பறையிலிருந்து (vault) 850000 பிட்காயின்கள்
திருடு போனது குறிப்பிடத்தக்கது. அத்தோடு அந்த சந்தை திவாலானது. பணம் போட்டவர்கள்
கதியும் அதோகதிதான்.
ஆனால், பிட்காயினின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால், யாரும்
பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதாக தெரியவில்லை. அடுத்த 18 மாதங்களில் அதன்
மதிப்பு லட்சம் டாலர் வரை போகும் என்று நம்புகின்றனர். தற்போது விஷம் போல
பிட்காயின் மதிப்பு ஏறுவதால் இது கூடிய சீக்கிரம் பெரியதாக சரியும் என்றே
எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment