ஒரு பத்து நாட்கள் முன்னாடி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அவர்கள்
கோல்ஃப் விளையாட சென்றிருக்கிறார். அப்போது அந்த பகுதியிலே இருக்கும் ஜூலி என்னும்
பெண்மணியும் அதே சாலையிலே சைக்கிளில் சென்றிருக்கிறார்.
ட்ரம்ப் ரிபப்ளிகன் கட்சியை சேர்ந்தவர். அம்மணியோ டெமோக்ரட் கட்சி.
ட்ரம்பை பார்த்ததும் ரத்தம் கொதிப்பேறியவர் தன்னுடைய நடுவிரலை தூக்கி காட்டி
விட்டார். இதை போட்டோவும் பிடித்து விட்டனர்.
ஆனால் போட்டோவில் நடுவிரலை தூக்குபவர் யாரென்று அடையாளம் தெரியாது.
முதுகு மட்டுமே தெரிந்தது. ஆனால் யாரோ ஒரு பெண்மணி ஜனாதிபதிக்கு எதிராக விரல்
உயர்த்தினார் என்று புகைப்படமும் வைரல் ஆகிவிட்டது.
வைரல் ஆன புகைப்படத்தை பார்த்த நம் அம்மணி குஷியாகி தானே அந்த
செய்கையை செய்தது என்று பப்ளிக்காக கூறி, அந்த புகைப்படத்தை தனது புரொஃபைல் படமாக
பேஸ்புக், ட்விட்டரில் வைத்து கொண்டார்.
இப்போது பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொண்டார் என்று கூறி அவரது
நிறுவனம் அவரை வேலையை விட்டு நீக்கியிருக்கிறது.
எதற்காக இதை சொல்கிறேன் என்றால்....
எதற்காக இதை சொல்கிறேன் என்றால்....
1. நம் ஊரில் ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் வாகனங்களுக்கு அருகே
சாதாரண மனிதன் சைக்கிள் ஓட்டி செல்ல முடியுமா? இத்தனைக்கும் அமெரிக்கர்களுக்கும்
தீவிரவாத அச்சுறுத்தல் உண்டு.
2. அப்படிப்பட்ட ஒரு பிரமுகருக்கு தைரியமாக தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்ய சாதாரண குடிமகனுக்கு தைரியம் வருமா? (ஆபாசமாக எதிர்ப்பு காட்ட சொல்லவில்லை... நாகரீகமாக எதிர்ப்பை காட்ட முடியுமா?)
3. முதுகு மட்டுமே தெரியும் புகைப்படத்தை, நான்தான் இதை செய்தேன் என்று பெருமையடித்து கொண்டு புரொஃபைல் படமாக வைக்க இயலுமா?

அவர்கள் ஊரிலே கோர்ட்டுகள், சட்டத்தின் மீது இருக்கும்
நம்பிக்கை.... அதை நம் ஊரிலே கொண்டு வர வேண்டும்.
No comments:
Post a Comment