மக்கள் எல்லோரும் வரி கட்டவேண்டும், மானியங்களை விட்டு விட
வேண்டும் என்று அரசாங்கம் சொல்வதும், அதற்கும் மக்களிள் சிலர் ‘ஆமாம், சாமி’
போடுவதும் தொடர் கதையாகி கொண்டு வருகிறது.
எவ்வளவு வரி கட்டினாலும், எவ்வளவு வருமானம் வந்தாலும்
அரசாங்கத்துக்கு போதவில்லையே என்றால் சிஸ்டத்தில் ஓட்டைகள் உள்ளன என்று பொருள்.
ஓட்டை நம்பர் ஒன்று - அரசாங்க திட்டங்களில் நடக்கும் ஊழல். ஓட்டை
நம்பர் இரண்டு - கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்படும் வரிச்சலுகைகளும், கடன்களும்,
கடன் தள்ளுபடிகளும். ஓட்டை நம்பர் மூன்று - அரசு திட்டங்களை திறன்பட
செயல்படுத்தாமை.
இந்த மூன்று ஓட்டைகளையும் அடைக்காமல் எத்தனை வரி விதித்தாலும்,
அத்தனை குடிமக்களும் வரி கட்டினாலும், மானியங்களை எல்லாம் விட்டு கொடுத்தாலும்
பிரயோஜனமில்லை.
No comments:
Post a Comment