சில நாட்களுக்கு முன் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நடுவிரல் காட்டி
கடுப்பேற்றிய ஜூலி பிரிஸ்க்மேன் குறித்து பதிவிட்டிருந்தேன். பதிவின் லிங்க் இங்கே
– https://goo.gl/tHSyBLஅந்த
பதிவிற்கு updates இதோ...
ஜூலி வேலை பார்த்த நிறுவனம் அரசாங்க காண்ட்ராக்டுகளை(யும்)
எடுக்கும் நிறுவனம். எதற்கு வம்பு என்று நினைத்தார்களோ என்னவோ, ஜூலியை வேலையை
விட்டு தூக்கி விட்டனர்.
ஜூலிக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு. வேலை இல்லாமல் ஜூலி கஷ்டப்பட
கூடாது என்று நினைத்தவர்கள் ஜூலிக்கு ஆதரவு தெரிவித்து Gofundme – யில் பணம்
திரட்ட ஆரம்பித்தனர். நிர்ணயிக்கப்பட்ட தொகை ஒரு லட்சம் டாலர்கள்... ஆனால், 10
நாட்களி்லேயே 116000 டாலர்கள் வசூலாகிவிட்டது. இன்னும் தொகை குவிகிறது. (நான் இந்த
பதிவை டைப் செய்து முடிப்பதற்குள் நன்கொடை 2000 டாலர்கள் அதிகரித்து விட்டது).
இன்னொரு செய்தி... சமீபத்தில் ட்ரம்பின் ட்விட்டர் அக்கௌண்ட் சில
நிமிடங்களுக்கு செயலிழந்து விட்டது. ட்விட்டரில் பணியாற்றிய ஒருவர் தன் கடைசி
வேலைநாளில் இது போல ஒரு சேட்டை செய்து போய்விட்டார். உடனடியாக சுதாரித்து கொண்ட
ட்விட்டர், ட்ரம்பின் அக்கௌண்டிற்கு மீண்டும் உயிர் கொடுத்து விட்டது. ஆனால், அந்த
பணியாளருக்கு பலத்த பாராட்டுக்கள் குவிந்தன.
ட்ரம்புக்கு அவங்க ஊரில் மதிப்பு இப்படி இருக்கு...!
No comments:
Post a Comment