ஃபிட்ச் ரேட்டிங் ஏஜென்சி இந்தியாவின் GDP முன்கணிப்பை (Forecast)
குறைத்துள்ளது. இத்தனைக்கும் கடந்த காலாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி சற்றே
முன்னேற்றம் காட்டியது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு ஜி.டி.பி அதிகரிக்காததால்
முன்கணிப்பை குறைத்ததாக ஃபிட்ச் கூறியுள்ளது.
பொருளாதாரம் சிறிது சிறிதாக இன்னும் இரண்டு வருடங்களில் சரியாகும்
என்று ஃபிட்ச் கூறுகிறது. நவம்பர் நடுவில் வந்த மூடிஸ் ரேடிங்கை விட ஃபிட்ச்
கணிப்பே சரியாக இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.
ஒரு உதாரணம் சொல்கிறேன். நவம்பர் மாத PV (Passenger Vehicles)
விற்பனை அதிகரித்திருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், பல கம்பெனிகளுக்கு PV விற்பனை
இன்னும் 2015 நவம்பர் விற்பனை அளவிற்கு கூட வரவில்லை. 2016 நவம்பரில்
டீமானிடைஸேஷன் காரணமாக விற்பனை படுத்து விட்டது. 2017 நவம்பர் விற்பனை போன
வருடத்தை காட்டிலும் அதிகமே ஒழிய 2015 விற்பனையை விட குறைவுதான். வளர்ச்சி Lower
base காரணமாக ஏற்பட்டதே ஒழிய, உண்மையான வளர்ச்சியின் காரணமாக ஏற்பட்டதாக
தெரியவில்லை.
வரும் மாதங்களில் அரசாங்கம் பொருளாதாரம் வளர்ந்துவிட்டது என்று சொல்லும்
போதெல்லாம் 2015, 2016ம் ஆண்டோடு ஒப்பிட்டு பார்க்கவேண்டும். காரணம்
டீமானிடைஸேஷனால் கடந்த ஒரு வருடத்தில் அனைத்து நம்பர்களும் விழுந்துவிட்டன.
அதனால், பொருளாதார வளர்ச்சி எனும் போதெல்லாம் இந்த Lower Base Effect – ஐ மனதில்
கொள்ளவேண்டும்.
முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தியாவின் வளர்ச்சி குறைய
டீமானிடைஸேஷனும், ஜி.எஸ்.டி வரிவிதிப்பும் ஒரு காரணம் என்று ஃபிட்ச்
கூறியுள்ளதுதான்.
இப்படி டீமானிடைஸேஷன் தவறு என்று பலரும் கூறிவிட்ட நிலையில்
பிரதமரும், நிதி அமைச்சரும் மட்டும் சரியான நடவடிக்கை என்று கூறி வருவது முழு
பூசணிக்காயை மறைக்க முயலுவதாகவே தோன்றுகிறது. பிரதமரும், நிதி அமைச்சரும் தவறுகளை
ஒப்பு கொள்வதால் மட்டுமே மக்களுக்கு அவர்கள் மேல் நம்பிக்கை வரும்.
No comments:
Post a Comment