Sunday, 3 June 2018

Think Straight


Think Straight  என்றொரு மிகச்சிறிய புத்தகம்… Darius Forox என்பவர் எழுதியது. Pragmatism- த்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ள இந்த புத்தகத்தை சமீபத்தில் படித்தேன்.



ஆரம்பத்தில் ஒரு விஷயமும் இல்லாமல் சுற்றி கொண்டு இருக்கும் புத்தகம், மூன்றாவது அத்யாயத்தில் Pragmatism- த்திற்கு இன்ட்ரோ தருகிறது – ‘The True is that which works’.

அதன் பின்னர்தான் புத்தகமே ஆரம்பிக்கிறது. மனம் என்பது ஒரு இயந்திரம்…. அதை தேவையான நேரம் மட்டுமே உபயோகப்படுத்தவேண்டும் என்பது புத்தகத்தின் அடிநாத கருத்துகளில் ஒன்று. வாழ்க்கை என்பது நேர்கோடல்ல, தோல்விகளை ஏற்று கொள்வது, நாம் இன்று செய்யும் செயல்கள் எப்படி நாளைய வாழ்க்கைக்கு உதவுகிறது, தேவையில்லாத எண்ணங்கள், அவற்றை தடுப்பது எப்படி, தீவிரமாக தகவல்களை சேகரிப்பது, தகவல்களின் அடிப்படையில் முடிவெடுப்பது, மனதின் சோர்வை கடந்து செல்வது, மன அமைதி போன்ற பல விஷயங்களை எளிமையாக விளக்குகிறார்.

Cognitive Bias  பற்றி ஆசிரியரால் சரியாக விளக்க முடியவில்லை. Pragmatism அடிப்படையாக கொண்ட புத்தகம் dogmaவில்  மாட்டி கொள்வது ஒரு சுவாரஸ்யமான முரண்…! மற்ற விஷயங்களை எளிமையாக விளக்கியதற்காக மன்னிச்சூ..!

மனம், அதன் செயல்பாடுகள், சிந்தனை, தத்துவம் இவற்றில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த புத்தகத்தை படிக்கலாம்.




No comments:

Post a Comment