ONGC – இந்திய அரசின் பொதுத்துறை
நிறுவனங்களில் ஒன்று. கிட்டத்தட்ட 78% பங்குகள் மத்திய அரசு மற்றும் அரசு நிறுவனங்களின்
வசம் உள்ளது. மிச்ச பங்குகள் பொதுமக்களிடம், Institutional investors- இடமும் உள்ளது.

எப்படி நடந்தது இந்த மாற்றம்?
எல்லாம் நம் பிரதமரின் கைவண்ணம்தான். Hindustan Petoleum Corporation – ல் தனக்கு இருக்கும் 51% பங்குகளை அரசு ONGC-க்கு
கட்டாயப்படுத்தி விற்றது. (பங்கின் சந்தைவிலைக்கு 14% அதிகமான விலை வைக்கப்பட்டது).
ONGC- க்கு இதனால் சில சாதகங்கள் இருக்கும் என்று சொல்லப்பட்டாலும் இது one sided
deal-தான்.
அது தவிர வழக்கத்திற்கு மாறாக
8500 கோடி ரூபாய்களுக்கு டிவிடெண்ட் கொடுக்கப்பட்டது. மொத்தமாக 42600 கோடி ரூபாய்
ONGC-யிடமிருந்து மத்திய அரசுக்கு சென்றுள்ளது. ONGC கடன் வாங்காமல் வேறென்ன செய்யும்?
ONGC முதலீடு செய்யவேண்டிய திட்டங்கள்
86000 கோடி ரூபாய்க்கு அடுத்தடுத்து காத்திருக்கின்றன. கண்டிப்பாக ONGC- க்கு மேலும்
கடன் கிடைக்கும். ஆனால், மத்திய அரசு ONGC- யை மொட்டை அடித்ததென்னவோ உண்மை.
இப்படி ONGC – யை மோடி அரசு நிர்பந்திப்பது
முதல்முறையல்ல. 2016ல் குஜராத் அரசின் பொதுத்துறை நிறுவனமான GSPC-யை ONGC வாங்கியது.
அதன் பின்னால் 20000 கோடி ரூபாய் ஊழல் என்று பேசி கொள்கிறார்கள். ஊழலை மறைப்பதற்காக,
ONGC GSPC-யை வாங்குமாறு நிர்பந்திக்கப்பட்டது. (GSPC ஊழல் தனிக்கதை… முடிந்தால் பதிவிடுகிறேன்.
காங்கிரஸிற்கு பாஜக எந்த விதத்திலும் சளைத்தது அல்ல)
பட்ஜெட் பற்றாக்குறையை சமாளிக்க
பொதுத்துறை நிறுவனங்களை விற்பது எந்தவிதத்திலும் நியாயமல்ல…! இவ்வளவு பணமும் எங்கே
போகிறது…?
No comments:
Post a Comment