Monday 11 June 2018

Freaknomics

Freakonomics – Levit மற்றும் Dubner இருவரும் சேர்ந்து எழுதியிருக்கும் புத்தகம்.

லெவிட் ஒரு பொருளாதார நிபுணர்… ஆனால், தனக்கு பொருளாதாரமே தெரியாது என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்கிறார். ஆக, இது நிச்சயமாக பொருளாதாரம் குறித்த புத்தகமே கிடையாது. பொருளாதார நிபுணர்கள் உபயோகப்படுத்தும் சில புள்ளியியல் கருவிகளை (Statistical tools) மற்ற இடங்களில் உபயோகப்படுத்தி எப்படி ஆராயலாம் என்று இந்த புத்தகம் கூறுகிறது. ஆக, தலைப்பே பொருத்தமாயில்லை.
ஒரு காரியம் செய்வதற்கு அல்லது செய்யாமல் இருப்பதற்கு எது நம்மை தூண்டுகிறது? அதுதான் இன்சென்டிவ் (Incentive). இந்த இன்சென்டிவ்விற்கு அடிப்படையாக மூன்று காரணிகளை லெவிட் சொல்கிறார் – Economical, Moral and Social. Emotional காரணியையும் சேர்த்திருக்கலாம், நான் சொல்வதை அவர் எங்கே கேட்க போகிறார்?
மிகப்பெரிய டேட்டா செட் பாப்புலேஷனை, இந்த மூன்று காரணிகளால் தூண்டப்படும் இன்சென்டிவ்வை வைத்து, ஆராய்ந்து பார்த்து, நாம் எளிதில் யூகிக்க முடியாத முடிவுகளை நிறுவுவதே Freakonomics.
இந்த புத்தகத்தில் இப்படி ஆராயப்பட்ட கேள்விகள் - ரத்த தானம் அளிப்பவர்களுக்கு கொஞ்சம் பணம் தந்து ஊக்கமளித்தால் நிறைய பேர் ரத்த தானம் செய்வார்களா? தேர்வில் ஊக்கத்தொகை சம்பாதிக்க தேர்வெழுதும் மாணவர்களுக்கு உதவும் ஆசிரியரை கண்டுபிடிப்பது எப்படி? அமெரிக்காவில் 70 லட்சம் குழந்தைகள் திடீரென்று காணாமல் போனது எப்படி? ஜப்பானிய சுமோ போட்டிகளில் fixing நடக்கிறதா? ரியல் எஸ்டேட் ப்ரோக்கர்கள் அவர்கள் வீட்டை எப்படி விற்கிறார்கள்? இன்ஷுரன்ஸ் ப்ரீமியம் குறைந்தது எப்படி? குழந்தைகளுக்கு பெயர் எப்படி வைக்கிறார்கள்? அமெரிக்காவில் 90களில் குற்றச்செயல்கள் குறைந்தது எப்படி? தேர்தலில் பணம் அதிகமாக செலவழித்தால் வேட்பாளர் வெற்றி பெறுவாரா? போதை பொருள் விற்பவர்களுக்கு குடும்பம் ஏன்? பெற்றோர் நல்ல பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பது அவசியமா? டேட்டிங் வெப்சைட்டுகளில் நேர்மையாக விவரங்கள் அளித்தால் பெண்கள் கிடைப்பார்களா?
இதிலிருந்து நம் வாழ்க்கைக்கு ஏதாச்சும் பிரயோஜனம் இருக்கிறதா? ஒன்றுமில்லை… இதை புத்தகத்தின் ஆசிரியர்களே ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், இரண்டு விஷயங்கள் முக்கியமானவை..
ஒன்று, நம் டேட்டாவை வைத்து என்ன சார் செய்யபோகிறார்கள் என்று யாரும் கேட்க முடியாது. நம் தனிப்பட்ட டேட்டா பிரயோஜனமில்லாததாக இருக்கலாம்… ஆனால், டேட்டா பாப்புலேஷனாக பார்க்கும் போது, நம் டேட்டாவிற்கும் பிரயோஜனம் இருக்கிறது. மொத்த பாப்புலேஷனோடு ஒப்பிடும்போது நம்முடைய தனிப்பட்ட டேட்டாவிற்கு அர்த்தம் வருகிறது.
இரண்டு, நம் சமூகத்தை ஆய்வு செய்ய டேட்டா அவசியம். வெள்ளையர் – கருப்பர் பேதம், சமூகநிலை குறித்து இந்த புத்தகத்தில் டேட்டா உதவியோடு பிரித்து மேய்கிறார்கள். நம்ம ஊரில் இவ்வளவு டேட்டா கிடைக்குமா?

No comments:

Post a Comment