Syllogism என்பது தர்க்க விதிகளில் ஒன்று. ‘ல்’ அழுத்தாமல் ஸிலோஜிஸம் என்று
உச்சரிக்கவேண்டும் இரண்டு கோட்பாடுகளை எடுத்து கொண்டு சிந்தித்து அதிலிருந்து
மூன்றாவதாக ஒரு முடிவை நிறுவும் ஒரு முறைதான் ஸிலோஜிஸம்.
உதாரணம் சொன்னால் எளிதாக புரியும். சதுரங்கம் பொறுமை அதிகம் தேவைப்படும்
ஒரு விளையாட்டு... முனுசாமி திறமையாக சதுரங்கம் விளையாடுவார். இவை கோட்பாடுகள்.
அப்படியென்றால், முனுசாமிக்கு பொறுமை அதிகம். இது முடிவு.... இவ்வளவுதான்
ஸிலோஜிஸம்.
இதில் முடிவு என்பது லாஜிக்காக இருக்கவேண்டும். இல்லையேல் அபத்தமாக
சிந்திக்க சாத்தியம் உண்டு. உதாரணமாக, இதை பாருங்கள்... எல்லா பூனைகளும் இறந்து
போகின்றன... ஔரங்கசீப்பும் இறந்து போனார். அதனால், ஔரங்கசீப் ஒரு பூனை. இது தவறான
ஸிலோஜிஸம்.
நம் சிந்தனையில் பல தர்க்கவிதிகளை நம்மையே அறியாமல் பயன்படுத்துகிறோம்.
அவற்றை அறிந்தால் அதன் நீக்குபோக்கு தெரிந்து பயன்படுத்த முடியும். யோசித்து
பாருங்கள், நம்மிடையே புழங்கும் பல அரசியல், சமூகம் சார்ந்த கருத்துகள் ஸிலோஜிஸம்
கொண்டு கட்டமைக்கப்பட்டிருப்பது தெரியும்.
ஒரு உதாரணம் சொல்லவா?
அந்த நடிகர் எல்லா திரைப்படங்களிலும் நேர்மையானவராக இருந்தார்... இப்போது,
அரசியலில் நுழைகிறார். ஆக, அரசியலிலும் நேர்மையானவராக இருப்பார். இது தவறான
ஸிலோஜிஸம் என்பதை உணர்ந்தால், நீங்கள் ப்ராக்டிகலாக சிந்திக்க தொடங்கிவிட்டீர்கள்
என்று அர்த்தம்...!
No comments:
Post a Comment