ஒடிஷாவில் உள்ள சந்திரபாகா பீச்
சமீபத்தில் Blue Flag அங்கீகாரம் பெற்றுள்ளது.
உலகில் உள்ள கடற்கரைகள், படகுத்துறைகளுக்கு
வழங்கப்படும் ஒரு அங்கீகாரம்தான் Blue flag. கடல் நீரின் தூய்மை, கடற்கரை சுத்தம்,
சுற்றுசூழல் விழிப்புணர்வு, பாதுகாப்பு ஆகிய சில அம்சங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு
Foundation for Environmental Education என்னும் அமைப்பால் இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
60 உறுப்பினர் நாடுகளுக்கு மேல்
இருந்தாலும், இந்த அமைப்பு ஐரோப்பிய யூனியனை சேர்ந்ததால் பொதுவாக ஐரோப்பிய நாடுகளில்தான்
blue flag அங்கீகாரம் பிரபலம். முயற்சி செய்தால் மற்ற நாடுகளும் அங்கீகாரம் பெறலாம்,
தடையேதுமில்லை.
அப்படித்தான் ஒடிஷாவில் கோனார்க்
அருகே உள்ள சந்திரபாகா பீச் Blue Flag அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இந்தியாவில் மேலும்
12 பீச்களுக்கு இந்த அங்கீகாரத்தை வாங்க முயற்சிக்கிறார்கள். ஆசியாவிலேயே Blue
flag அங்கீகாரம் வாங்கிய முதல் பீச் இதுதான் என்கிறார்கள்.... அது தவறு, ஜப்பானில்
2 பீச்களுக்கு 2016லேயே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுவிட்டது. (ஒரு நியூஸ்பேப்பர் தப்பா
எழுதினா அத்தனை பேரும் தப்பாகவே எழுதுகிறார்கள்)
முதலாவதோ, இரண்டாவதோ... இதனால்
tourism வளரும் என்கிறார்கள்... சந்தோஷம்...! முயற்சியெடுத்த மத்திய அரசிற்கும், ஒடிஷா
அரசிற்கும் பாராட்டுக்கள்...!
இன்னும் அங்கீகாரத்திற்கு காத்திருக்கும்
12 பீச் லிஸ்டில் பாண்டிச்சேரியிலிருந்தும் ஒரு பீச் இருக்கிறது. ஆனால், தமிழகத்திலிருந்து
ஒன்று கூட இல்லை...!
No comments:
Post a Comment