வெளிநாட்டு கப்பல்கள் இந்தியாவில்
இருக்கும் துறைமுகங்களுக்குள் சரக்கு போக்குவரத்து செய்யக்கூடாது. இதை கேபடாஜ்
(Cabotage) என்பார்கள். அமெரிக்கா, சீனா உட்பட 90-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த கேபடாஜ்
விதியை வைத்திருக்கின்றன. இந்தியாவிலும் இந்த தடை இருந்தது... ஆனா, இப்போ இல்லை..!
பொதுவாக வெளிநாட்டு கப்பல்கள்
மூலம் சரக்கு போக்குவரத்து செய்வது சீப்பான விஷயம். காரணம், வெளிநாட்டு கப்பல்கள் இந்தியாவில்
பெரிதாக வரி கட்ட தேவையில்லை. சராசரியாக இந்திய கப்பல் 9.7% வரி கட்டினால், வெளிநாட்டு
கப்பல் 2.2% வரி கட்டும். GST இந்திய கப்பல்களுக்கு மட்டுமே. மேலும் சில அரசு விதிமுறைகள்
இந்திய கப்பல்களின் செலவை அதிகரிக்கும். கப்பல்களின் செலவு அதிகரித்தால் ஏற்றுமதி-இறக்குமதி
செலவும் அதிகரிக்கும். அதனால், ஏற்றுமதி – இறக்குமதியாளர்களுக்கு வெளிநாட்டு கப்பல்கள்தான்
சரக்கு போக்குவரத்துக்கு நல்ல சாய்ஸ்.
பல ஆண்டு காலமாக, கார்ப்பரேட்கள்
கேபடாஜ் தடையை நீக்கவேண்டும் என்று லாபி செய்து கொண்டிருந்தன. இப்போது மோடி அரசு அந்த
தடையை நீக்கிவிட்டது. இனி, வெளிநாட்டு கப்பல்கள் இந்தியாவிற்குள் இருக்கும் துறைமுகங்களுக்கு
இடையே சரக்கு போக்குவரத்தில் ஈடுபடலாம்.
இந்தியாவில் பல துறைமுகங்கள் ஏற்கனவே
ஆதானி குழுமத்தின் வசம் உள்ளது. இன்னும் பல துறைமுகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு கப்பல் கம்பெனிகளோடு ஆதானி பல ஒப்பந்தங்கள் போட்டிருக்கிறது.
இப்போது கேபடாஜ் விதியை நீக்கியதால்
பெரும்பலன் அடைய போவது ஆதானி குழுமம்தான் என்கிறார்கள்... நஷ்டம் அடைய போவது மும்பையில்
உள்ள அரசுக்கு சொந்தமான JNPT துறைமுகம்... மேலும் உள்ளூர் கப்பல் கம்பெனிகளில் கிட்டதட்ட
ஒரு லட்சம் பேர் வரை வேலையிழக்கலாம்... அரசும் தன் வரி வருமானத்தை இழக்கும். ஒரு கட்டத்தில்
நாட்டின் கப்பல் போக்குவரத்து முழுக்க வெளிநாட்டு கம்பெனிகளின் வசம் இருக்கும், இது
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் ஆகலாம்.
அதனால என்ன, நாலு பேரு நல்லா இருக்கனும்னா
எது பண்ணாலும் தப்பில்ல...! கரெக்டுதானே...!
No comments:
Post a Comment