எது நடந்துவிடுமோ என்று அஞ்சி
கொண்டிருந்தேனோ, அது நடந்தே விட்டது. Yes, ஆதார் பயோமெட்ரிக் தரவுகள் திருடு போயுள்ளன.
ஆந்திரா, தெலுங்கானா மற்றும் சில
மாநிலங்கள் சொத்துக்களை ரிஜிஸ்டர் செய்யும்போது ஆதார் நம்பரை கட்டாயமாக்கியுள்ளன. இப்படி
ரிஜிஸ்டர் செய்யப்படும் டாகுமெண்ட்களை முறையாக கட்டணம் செலுத்தியே நகலெடுத்து கொள்ளலாம்.
ஒரு சொத்து டாகுமென்டில் வாங்குபவர்,
விற்பவர், இரண்டு சாட்சிகள் என்று குறைந்தது 4 பேர் விவரமாவது இருக்கும். அந்த டாகுமென்டை
நகலெடுத்தால், அவர்கள் பெயர், முகவரி, ஆதார் நம்பர், PAN ஆகிய அனைத்து விவரங்களோடு
கைரேகையும் கிடைத்து விட்டது.
இந்த கை ரேகையை வைத்து ஒன்றும்
செய்யமுடியாது….. ஆனால், கொஞ்சம் low cost டெக்னாலஜியை பயன்படுத்தினாலே போதும்…. கைரேகையை
படம் எடுத்து, ஒரு பிலிமில் பதியவைத்து, போட்டோபாலிமர் ரெஸின் என்னும் திரவத்தில் மூழ்கடித்து,
அல்ட்ராவயலெட் லைட்டில் கொஞ்சம் காட்டினால்… கைரேகை ரெடி. இந்த பிலிமை நீங்கள் ஆதார்
ஆதன்டிகேஷன் மெஷினில் காட்டினால் ஒத்துக்கொள்ளுமாம். அதிக செலவு பிடிக்கும் விஷயமல்ல…
ஒரு கைரேகை ரெடி பண்ண 75 ரூபாய்தான் ஆகுமாம்.
ஹைதராபாத்தில் ஒரு சிம் விற்பனையாளர்
இது போல 6000 பேரின் ஆதார் தகவல்களையும், கைரேகைகளையும் திருடியிருக்கிறார். திருடப்பட்ட
கைரேகைகளை வைத்து சிம்களை ஆதன்டிகேட் செய்திருக்கிறார். (இதன் விரிவான நடைமுறை தெரியவில்லை)
கருப்பு மார்க்கெட்டில் ஒரு Aadhar Authenticated சிம் 500 ரூபாய்க்கு விற்பனையாகிறதாம்.
பார்ட்டி இன்னும் கொஞ்சம் பொறுமையாகவும்,
திறமையாகவும் இருந்திருந்தால் சொத்துக்களையே கைமாற்றியிருக்கலாம்… வங்கி அக்கௌண்டுகள்
கூட ஆரம்பித்திருக்கலாம். கிறுக்குப்பயல், ஒரே பயோமெட்ரிக் ஸ்கானரில், ஒரே மாதத்தில்
ஏகப்பட்ட ஆதன்டிகேஷன் செய்து மாட்டிக்கொண்டு விட்டான்.
இது தனிப்பட்ட சம்பவமல்ல… போன
செப்டம்பர் மாதம், உத்தரபிரதேசத்தில், கான்பூரில் இன்னும் விவரமாகவே திருடியிருக்கின்றனர்.
Authorised Aadhar Operator-டைய கைரேகையை திருட்டுத்தனமாக ஒரு சாதாரண பட்டர் பேப்பரில்
பதிய வைத்து கொண்டு, இதே மாதிரி போட்டோபாலிமர் ரெஸின் உபயோகித்து கைரேகை திருடிவிட்டனர்.
இதை வைத்துக்கொண்டு ஆதார் சிஸ்டம் உள்ளே நுழைந்திருக்கின்றனர்.
அதுமட்டுமல்ல, ஆதார் க்ளையண்ட்
சிஸ்டத்தின் சோர்ஸ் கோடையும் எடுத்துள்ளனர். இந்த சாப்ட்வேர் உபயோகித்துதான் ஆதார்
வழங்கப்படுகிறது. ரெடினா ஸ்கேனிங் முறையையும் எப்படியோ ஏமாற்றியிருக்கிறார்கள். (நல்லவேளையாக
எப்படி ஏமாற்றினார்கள் என்ற தகவல் செய்தித்தாளில்
தரவில்லை… அப்புறம் ஒவ்வொரு ஊருலேயும் இப்படி கிளம்புவாங்க..!)
அப்புறமென்ன, கனஜோராக பொய்யான
ஆதார் கார்டுகள் தயார் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்…! 10 பேர் கொண்ட அந்த கும்பலை கைது
செய்து உள்ளே போட்டிருக்கிறார்கள்.
நான் எப்போதும் சொல்லும் அதே விஷயம்தான்…
டெக்னாலஜி என்பது இருமுனை கத்தி…. அது எப்போதும் நமக்கு சாதகமாகத்தான் இயங்கும் என்று
நினைத்தால் நாம் முட்டாள்கள்… ஆதார், EVM இரண்டுமே தேசத்திற்கு பேராபத்துகள். டெக்னாலஜி
மோகத்தை குறைத்து கொள்வதே தேசத்திற்கும் மக்களுக்கும் நல்லது. யார் கரடியாக கத்தினாலும்,
அரசாங்கம் இதை கண்டிப்பாக காதில் வாங்கி கொள்ளாது.
தற்போதைக்கு நம்மால் செய்யக்கூடியது
இதுதான் - ஆதார் பயோமெட்ரிக் லாக் என்று ஒன்று இருக்கிறதாம். திருடர்கள் அன்லாக் செய்ய
வழி கண்டுபிடிக்கும் வரையில் அதை உபயோகிக்கலாம். அவ்வளவுதான் நம்மால் முடியும்…!
No comments:
Post a Comment