வையா
வெரடே – அப்படியென்றால் ஸ்பானிஷ் மொழியில் பசுமை வழி என்று அர்த்தம். நம்ம ஊர் சேலம்
– சென்னை சாலை இல்லை. மெக்ஸிகோ சிட்டியில் உள்ள சாலைகளை பசுமையான சாலையாக மாற்றும் ப்ராஜெக்டிற்கு
பசுமை வழி என்று பெயர்.
மெக்ஸிகோ
சிட்டி உலகின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்று. லேட்டஸ்ட் தகவல்கள் படி கிட்டத்தட்ட
2.25 கோடி மக்கள் வசிக்கிறார்கள் (சென்னை ஒரு கோடிதான் இருக்கும்). ரொம்ப காலமாகவே
அந்த ஊரில் அநியாய பொல்யூஷன். 90களிலேயே 10-ல் 6 பேருக்கு சுவாச பிரச்சனை இருந்தது.
சுற்றுசூழலை
கொஞ்சமேனும் காப்பாற்ற, இப்போது வெர்டிகல் கார்டன் (Vertical Garden) முறைப்படி சாலைகளில்
இருக்கும் பாலங்களின் தூண்களில் செடி, கொடிகளை வளர்க்கிறார்கள்... எப்படி?
வீணான
பிளாஸ்டிக் முதலின உபயோகித்து, போர்டுகள் செய்து, அதில் துணி குப்பைகளை கொண்டு ஹைட்ரோபோனிக்
(Hydroponic) என்னும் முறையிலே செடி நடுகிறார்கள். மண்ணே இல்லாமல் செடி வளர்க்கும்
முறை இது. செடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தண்ணீரில் கலந்து விடுவார்கள். செடி வேர்பிடித்து
வளர்வதற்கு Felt எனப்படும் துணிக்குப்பை உபயோகப்படும்.
சரி,
இதற்கு எவ்வளவு தண்ணீர் செலவாகும்? பாலங்களின் மேல் பொழியும் மழைநீரை சேகரித்து கொள்கிறார்கள்...
Grey water என்று சொல்லப்படும் அழுக்கு தண்ணீரையும்
உபயோகப்படுத்தி கொள்கிறார்கள். மக்களுக்கான குடிநீரில் கை வைக்கவில்லை. லாரியில் தண்ணீர்
கொண்டுபோய் தெருவெல்லாம் ஊற்றும் சமாசாரமல்ல... மாறாக, சொட்டு நீர் பாசன ஐடியாவை பயன்படுத்தி
தேவையான அளவு நீரை மட்டுமே செடிகளுக்கு அளிக்கிறார்கள். இது எல்லாமே சென்ஸார் கொண்டு,
ரிமோட்டாக நடக்கும் விஷயம்...!
ஆக,
குப்பைகளை கொண்டும், அழுக்கு தண்ணீர் கொண்டும், டெக்னாலஜியை கொண்டும் சாலையை பசுமையாக்குகிறார்கள்.
இதன்
பயன்கள் குறித்து, பல வெப்சைட்டுகள் பலவிதமான தரவுகளை தருகின்றன. அதனால் நான் அதற்குள்
போகவில்லை. நிறைய கார்பன்டைஆக்ஸைடு, தூசுகளை குறைத்து, ஆக்ஸிஜன் தருகிறது. கண்ணுக்கு
குளிர்ச்சியாக இருக்கிறது. அவ்வளவுதான் சேதி.
ஆனால்,
கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம், இதை மொத்தமும் செய்வது அரசாங்கம் இல்லை... பிரைவேட்
கம்பெனிகள். (கொஞ்சம் பணம் அரசாங்கமும் தருவதாக சொல்கிறார்கள்).
நம்
டெல்லியில் இதே போல செய்யவேண்டும் என்று ஆம்ஆத்மி முன்பு யோசித்தது. அப்புறம் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.
நம் நாட்டிலும் இது போல செய்யலாமே...!
No comments:
Post a Comment