இந்தியாவில் அமைப்பு சார்ந்த வேலைகளில்
(Formal Employment) இருப்பவர்கள் எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளது. 2017ல் 40.67 கோடி
பேர் பணிபுரிந்த இடத்தில் தற்போது 40.62 கோடி பேர் பணிபுரிகிறார்களாம். அதாவது, வேலையிழந்தவர்களின்
எண்ணிக்கை, புதிதாக வேலை கிடைத்தவர்களின் எண்ணிக்கையை விட 5 லட்சம் அதிகம். இது
formal sector மட்டும் என்பதை கணக்கில் கொள்ளவும். Informal sector-ல் இன்னமும் அதிகமாக
இருக்கக்கூடும்.
மார்ச் மாதமே இதுகுறித்து பதிவு
போட்டிருந்தேன். https://www.facebook.com/vijayasarathy.rao/posts/1680577802035035.
கூடிய விரைவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், இந்த வருடம்
ஒரு காலாண்டு கழிந்த பின்னரும் ராக் பாட்டம் எனப்படும் அடிமட்டம் தொடப்படவில்லை.
சென்ற வருடத்தோடு ஒப்பிடுகையில்
புதிய முதலீடுகள் 38% குறைந்துவிட்டன. ஏற்கனவே ஆரம்பித்த பிராஜெக்டுகளும் முடியாமல்
தாமதமாகி கொண்டிருக்கிறது. சென்ற வருடம் (17-18) FDI 15% குறைந்துவிட்டதாக தெரிகிறது.
பொருளாதாரம் Demo, GST பாதிப்பிலிருந்து இன்னும் வெளிவரவில்லை.
வேலைவாய்ப்புகள் மீண்டும் வர எத்தனை
மாதங்களாகுமோ? இதில் புதிய வேலைவாய்ப்புகள் என்று நாடாளுமன்றத்தில் மோடி சொல்வதெல்லாம்
எந்த அளவுக்கு உண்மை? Jobless growth யாருக்கு நன்மை?
No comments:
Post a Comment