ஒரு ஆறு
மாதங்களுக்கு முன்னர் உலக சுகாதார நிறுவனத்தில் (WHO) ஒரு தீர்மானம் இயற்றப்பட இருந்தது.
தீர்மானம் ரொம்ப சிம்பிள்… தாய்பாலுக்கு மாற்றாக ஃபார்முலா உணவுகள் (புட்டிபால் முதலியன)
இருக்கிறதல்லவா..? இப்போதெல்லாம் தாய்பாலை விட ஃபார்முலா உணவுகள்தான் சத்துமிக்கவை,
ஆரோக்கியமானவை என்று விளம்பரங்கள் வருகின்றன. உலகநாடுகள் இந்த பொய் பிரசாரத்தை தடுத்து
நிறுத்த வேண்டும் என்பதுதான் தீர்மானம்.
இந்த
தீர்மானத்தை ஈக்வடார் என்னும் நாடு முன்மொழிய வேண்டும்…. மற்ற நாடுகள் ஆதரிக்கவேண்டும்.
ரொம்ப ஈஸியாக தீர்மானம் நிறைவேறிவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்க, அமெரிக்கா
வடிவில் முட்டுக்கட்டை வந்தது.
இந்த
தீர்மானத்தை உப்புசப்பில்லாத தீர்மானமாக (diluted) மாற்ற முயன்ற அமெரிக்கா, ஒரு கட்டத்தில்
ஈக்வடார் நாட்டை மிரட்ட ஆரம்பித்தது. தீர்மானத்தை முன்மொழிந்தால் ஈக்வடார் மீது பொருளாதார
தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா மிரட்ட ஈக்வடார் பயந்து போய் ஒதுங்கி கொண்டது. அடுத்தடுத்து
ஒரு டஜனுக்கும் மேற்பட்ட நாடுகள் இது போல அமெரிக்காவால் மிரட்டப்பட்டு ஒதுங்கிகொண்டன.
கடைசியில்
அமெரிக்காவால் மிரட்டப்படமுடியாத நாடு, அதுதாங்க ரஷ்யா, தீர்மானத்தை முன்மொழிய அமெரிக்கா
மூக்குடைப்பட்டு ஒதுங்கி கொண்டது.
அமெரிக்கா
இது போல மிரட்ட காரணம், ஃபார்முலாக்களுக்கான மார்க்கெட். 70 பில்லியன் டாலர் மதிப்புள்ள
மார்க்கெட் தற்போது வளர்ந்த நாடுகளில் ஆதரவிழந்து வருகிறது. மக்களுக்கு தாய்பால் குறித்த
விழிப்புணர்வு வளருவதுதான் காரணம். (அதற்கு பதிலாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஃபார்முலா பிரபலமாகி வருவது கொடுமை!)
ஃபார்முலா உணவு வர்த்தகத்தை காப்பாற்றுவதற்காக ட்ரம்ப் அரசாங்கம் இப்படி மற்ற நாடுகளை மிரட்டுகிறது.
உலக சுகாதார அமைப்பிற்கு இதெல்லாம் தர்ம சங்கடம்… காரணம், அந்த அமைப்பிற்கான பெரிய
நிதி உதவி அமெரிக்காவிடமிருந்துதான் வருகிறது. So, அமெரிக்கா நாட்டாமைத்தனம் செய்கிறது.
இது தனிப்பட்ட
நிகழ்வல்ல… குப்பை உணவுகள் என்றழைக்கப்படும் Junk Foods பாக்கெட்டுகளின் மீது எச்சரிக்கை
வாசகங்கள் எழுதவேண்டும் என்னும் தீர்மானத்தையும் அமெரிக்கா எதிர்க்கிறது.
எவர்
ஆரோக்கியம் கெட்டாலும் பரவாயில்லை, வர்த்தகம் நடக்கவேண்டும். டாலர்தான் கடவுளப்பா…!
எவன் செத்தாலும் கவலையில்லைப்பா….!
No comments:
Post a Comment