Wednesday 16 May 2018

கர்நாடகா தேர்தல் – What Next?


நடந்து முடிந்த கர்நாடகா தேர்தலில், காங்கிரஸால் ஆட்சியை தக்கவைத்து கொள்ள முடியவில்லை. காங்கிரஸிற்கு நாடு முழுக்க நெட்வொர்க் இருந்தாலும், கையிலே இப்போது இருப்பது இரண்டு மூன்று சிறிய மாநிலங்கள்தான். Big Brother Status காங்கிரஸிற்கு இனியும் பொருந்தாது…!
ஒரு வெற்றி கூட்டணிக்கு தலைமை ஏற்கும் பலம் அந்த கட்சியிடம் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் ஒரு அணி வந்தால் அதில் எந்த கட்சி சேரும் என்றே தெரியவில்லை. இந்த நிலையில் காங்கிரஸ், தன் பெரியண்ணன் மனோபாவத்தை விட்டுவிட்டு, பாஜகவிற்கு எதிரான அணியில் சேரவேண்டும்.
பாஜகவிற்கு எதிராக ஒரே அணி…. அந்த அணியில் காங்கிரஸும் உண்டு. இதுதான் anti-incumbancy வோட்டுகளை சிதறாமல் அள்ள ஒரே வழி… காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணி, மூன்றாவதாக ஒரு அணி என்று அமைந்தால், பாஜக எதிர்ப்பு வாக்குகள் இரண்டாக பிரிந்து மீண்டும் பாஜகதான் வரும்.
அப்படியில்லை, காங்கிரஸ் தலைமையிலே ஒரு அணி என்று ஜல்லியடிக்க ஆரம்பித்தால், காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடாமலே இருக்கலாம். சில ஆயிரம் கோடிகள் பணமாவது அந்த கட்சிக்கு மிச்சம் ஆகும்.
ஆனால் இது நடக்குமா? அடுத்த இந்திராகாந்தி என்று பிரியங்காவை கொண்டு வந்து நிறுத்துவார்கள் என்று என் மனதில் இருக்கும் பட்சி சொல்கிறது. பார்ப்போம், என்ன நடக்கிறதென்று...!

No comments:

Post a Comment