Tuesday, 22 May 2018

NPA - Updates


மோசமான 12 வாராக்கடன் கேஸ்களில் ஒன்றிற்கு விடிவுகாலம் வந்துள்ளது. பூஷன் ஸ்டீல் என்னும் கம்பெனியை டாடா ஸ்டீல் தன் உபநிறுவனம் (Subsidiary) ஒன்றின் மூலம் வாங்குகிறது. இதன் மூலமாக பூஷன் ஸ்டீலின் வாராக்கடன்கள் பிரச்சனை தீர்க்கப்படுகிறது.

பூஷன் ஸ்டீலின் வாராக்கடன் 56079 கோடிகள். டாடாஸ்டீல் 35200 கோடிகளுக்கு பூஷன் ஸ்டீலை வாங்கியுள்ளது. ஆக 63% வசூல் வந்துள்ளது. மிச்சம் 37% போச்சு.... ஆனால் வாராக்கடன்களில் இந்தளவுக்கு வந்தாலே சந்தோஷம்தான்... கொடுத்த அசலில் 90% மேல் வந்துவிட்டதாக அரசு கூறுகிறது. (பாஜக அதரவாளர்கள் 4 லட்சம் கோடி வசூல் என்று அடித்துவிட்டதெல்லாம் புருடா..!)
Insolvency and Bankruptcy Code (ICB ) மூலமாக கிடைத்த முதல் தீர்வு இது... மோடி அரசுக்கு பாராட்டுக்கள்...! இந்த வெற்றிக்கு எந்த தடையும் புதிதாக முளைக்கக்கூடாது என்று வேண்டி கொள்வோம்.
என்னடா, இப்படி சொல்கிறானே என்றால் அதில் விஷயம் இருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் எலக்ட்ரோஸ்டீல் என்னும் கம்பெனியை வேதாந்தா நிறுவனம் ஏலத்தில் எடுத்தது. இதை கொல்கத்தா கோர்ட்டும் அப்ரூவ் செய்தது. ஆனால், ஏலத்தில் போட்டியிட்ட ரினைஸன்ஸ் ஸ்டீல் என்னும் நிறுவனம் இதற்கு எதிராக தடைஉத்தரவு வாங்கியுள்ளது. ஏலம் நேர்மையாக நடக்கவில்லை என்று குற்றச்சாட்டு.
எல்லா கேஸ்களும் பூஷன் ஸ்டீல் போல வெற்றிகரமாக முடியாது என்பது ரியாலிடி.... உதாரணமாக லேன்கோ இன்ப்ராடெக், ஜோதி ஸ்டரக்சர்ஸ் போன்ற கம்பெனிகளுக்கு சரியான ஏலத்தொகை வரவில்லை. அதனால் தடைப்பட்டு இருக்கிறது. எஸ்ஸார் ஸ்டீல் விஷயத்தில் யார் ஏலம் கேட்கலாம், யார் கேட்கக்கூடாது என்று பஞ்சாயத்து ஓடுகிறது.
வாராக்கடன் வசூலிப்பு என்றால் ஜேபி இன்ப்ரா குறித்து பேசியே தீரவேண்டும்...

ஜேபி இன்ப்ரா ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி... தங்களுக்கு வீடு கட்டி தரும் என்று நம்பி பல ஆயிரக்கணக்கான மக்கள் பணம் போட, கம்பெனியோ திவாலாகிவிட்டது. சிக்கலான விஷயம் அதன் பேரண்ட் கம்பெனியான ஜேபி அசோசியேட் ஜேபி இன்ப்ராவின் நிலத்தை அடமானம் வைத்து பல கோடி கடன் வாங்கியிருக்கிறது.
வீடு கட்டி தருவார்கள் என்று நம்பி சேமிப்பு தொகை எடுத்து போட்டும், கடனை வாங்கியும் (வராத வீட்டிற்கு வருடக்கணக்கில் EMI கட்டுகிறார்கள்), பணத்தை போட்ட மக்கள்? அவர்கள் unsecured creditors கேட்டகரியில் வருகிறார்கள். அதாவது secured creditor-களான வங்கிகள் வசூலித்தது போக ஏதாவது பணம் மீதமிருந்தால்தான் மக்களுக்கு வரும். இங்கே வங்கிகளுக்கே மொத்தப்பணம் வராது என்னும் நிலைமை.
IBC சட்டத்தில் Unsecured Creditors விஷயத்தில் திருத்தம் வரவேண்டும் என்று கேட்கிறார்கள்.... பொதுமக்கள் ஒன்றும் பிஸினஸ் செய்ய வீடு வாங்கவில்லையே... End customersதானே... ஆக, இது நியாயமான வேண்டுகோள்தான். சுப்ரீம் கோர்ட் இந்த முதலீட்டாளர்களை பரிவுடன் கவனித்து வருகிறது என்பதே ஆறுதல். கூடவே உபி அரசு வேறு ஏதாவது பிரமோட்டர்களை வைத்து வீடுகளை கட்டி முடிக்க முயற்சிகள் எடுத்து வருகிறது. நல்ல விஷயம்.
ஜேபி இன்ப்ரா கம்பெனியை விற்று கடன்களை அடைக்கலாம் என்று ஏலம் நடந்தது. ஜேபி இன்ப்ரா 12500-15000 கோடிகள் விலை பெறும் என்பது நிபுணர்கள் கணிப்பு. ஆனால், லக்ஷத்வீப் என்னும் கம்பெனி 7350 கோடிக்கு கேட்டதுதான் அதிகமான ஏலத்தொகை.
ஆக, எல்லா கேஸ்களும் பூஷன்ஸ்டீல் போல பிரமாதமான வெற்றிக்கதை ஆகிவிடாது. இதுதான் ரியாலிடி. இதற்கு நடுவிலே வேண்டிய கம்பெனிக்கு விற்க சொன்னார்கள் என்று ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் வரக்கூடாது... அது கேவலமான அரசியலில் கொண்டு போய்விடும்.
அரசு செய்யவேண்டிய இன்னொரு முக்கியமான காரியம் உண்டு... அதுதான் அதிக ஜட்ஜுகளை நியமிப்பது.... வெறும் 26 ஜட்ஜுகள் இது போல 2500 கேஸ்களை கவனிக்கிறார்கள். இந்த வேகத்தில் போனால் 2030ல் கூட வாராக்கடன் பிரச்சனைகள் தீராது. மோடி அரசு தீவிரமாக செயல்படவேண்டிய ஏரியா இது...!

No comments:

Post a Comment