Smile – புன்னகையினால் பல ஆரோக்கிய நன்மைகள் உண்டு… மன அழுத்தம்
குறையும், நோய் எதிர்ப்பு சக்தி கூடும், மற்றும் இன்னபிற சமாச்சாரங்கள்.
அதனால், பல காலமாக மருத்துவர்கள் உங்களை புன்னகைக்க சொல்கின்றனர்.
புன்னகை வராவிட்டால்…? பரவாயில்லை… புன்னகைப்பது போல நடியுங்கள். Fake it. காரணம்,
உங்கள் மூளையின் அறியாமை… நீங்கள் சந்தோஷமாக இருக்கும் போது புன்னகைப்பீர்கள்
அல்லவா, அதனால் புன்னகைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்று மூளை அர்த்தம்
செய்து கொள்ளும். ஆகவே, எப்போதும் புன்னகைப்பீர்.
அதுதான் கிடையாது…. உங்கள் மூளையொன்றும் அடி முட்டாளல்ல. கொஞ்ச
காலத்திற்குள் உங்கள் திருட்டுத்தனம் அதற்கு புரிந்து விடும். அதற்கு பின்…?
பொய்யான புன்னகை சோகத்தையே தரும்… கொஞ்ச நாளில் மூளையின் வயர் கனெக்ஷன் தவறாக
புரிந்து கொள்ளப்பட்டு உண்மையான புன்னகையும் சோகத்தையே தருகிறது..!
உண்மையான, வாய்விட்டு, மனம்விட்டு சிரிக்கும் சிரிப்பும் (Duchenne
Smile…. டஷேன் என்று உச்சரிக்கவேண்டும்… கண்கள் லேசாக சுருங்கி சிரிக்கும் வலது
பக்க படத்தை பாருங்கள்), பொய்யான சிரிப்பும் மூளையின் இருவேறு பகுதிகளால்
தூண்டப்படுகின்றன. மூளையின் வெவ்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டவர்களை வைத்து இதை
கண்டுப்பிடித்து இருக்கிறார்கள். ஆகவே, பலன்களும் வேறுபடும்.
பொய்யான சிரிப்பு ஒரு சுமை… அலுவலகங்களில், கடைகளில் வேலை
பார்ப்பவர்கள் நாள் முழுவதும் பொய்யான புன்னகையை முகத்தில் அணிந்து கொண்டு வேலை
பார்க்கிறார்கள். மனதின் உண்மையான உணர்ச்சியை முகம் வெளிக்காட்டாததால் அவர்கள்
மனம் பாதிக்கப்படுகிறது. நாளடைவில் பாஸிட்டிவ் எண்ணங்கள் குறைந்து, நெகட்டிவ்
எண்ணங்கள் மேலோங்குகிறதாம்.
So, வாய்விட்டு சிரித்தால் மட்டும் போதாது, மனம் விட்டு
சிரிக்கவேண்டும். OK ?
No comments:
Post a Comment