Friday 25 May 2018

Vedanta


ஸ்டெர்லைட் விவகாரம் வந்தபிறகு சில தகவல்கள் என் கண்ணில் பட்டன. படித்தவற்றை பகிர்கிறேன்.
வாஜ்பாய் அரசு பதவியேற்றவுடன், அதிதீவிரமாக, அவசர அவசரமாக disinvestment வேலைகளில் இறங்கியது. அப்போது விற்கப்பட்ட கம்பெனிகளில் இரண்டு – பாரத் அலுமினியம் கம்பெனி (Balco) மற்றும் ஹிந்துஸ்தான் ஸிங்க் (Hindustan Zinc). இரண்டு கம்பெனிகளையும் வாங்கியது.... yes, வேதாந்தா. இந்த இரண்டு கம்பெனிகளையும் அடிமாட்டு விலையில் வேதாந்தாவிற்கு விற்றதாக CAG ரிப்போர்ட்டில் கண்டித்தது குறிப்பிடத்தக்கது.
CAG கணிப்புப்படி Balco கம்பெனியை மதிப்பிட 45 நாட்கள் ஆகும். ஆனால், வெறும் 19 நாளில் Balco மதிப்பிடப்பட்டது. எந்த லட்சணத்தில் மதிப்பீடு நடந்திருக்கும்? Balco வை வேதாந்தா வாங்கிய பிறகு அதன் உற்பத்தி 90000 டன்களிலிருந்து 131400 டன்களாக உயர்ந்தது. நல்ல விஷயம் என்கிறீர்களா...? இந்த existing capacity விலை நிர்ணயிக்கும்போது கண்டு கொள்ளப்படவில்லை. சூப்பர்...!
Hind Zinc கதையும் இப்படித்தான்.... கம்பெனியை விற்பதற்கு முன் Business Plan தயாரிக்கப்படவில்லை. Hind Zinc-ற்கு சொந்தமான 6 சுரங்ககளில் ஒன்றில்தான் தாது எடுக்கப்படுவதாக கணக்கு காட்டப்பட்டது. எப்படி விலை நிர்ணயப்பட்டிருக்கும், சொல்லுங்கள்?
அப்புறம் செசகோவா (Sesagoa) என்னும் இரும்புதாது உற்பத்தி கம்பெனி. இந்த கம்பெனியை 2007-ல் மிட்சுயி ஃபின்சைடர் என்னும் ஜப்பானிய கம்பெனி வைத்திருந்தது. செசகோவாவை அந்த கம்பெனி விற்க விரும்பியது. பல பேர் கம்பனியை வாங்க போட்டியிட்டனர்.
அப்போது சிதம்பரம் நிதியமைச்சர். பட்ஜெட்டில் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். இரும்பு தாது ஏற்றுமதிக்கு, ஒரு டன்னுக்கு 300 ரூபாய் வீதம் ஏற்றுமதி வரி விதித்தார். புதிய வரியினால் செசகோவாவின் லாபம் குறையுமென்று முதலீட்டாளர்கள் பயந்தனர். பங்கு சந்தையில் பங்கு விலை 20% வீழ்ந்தது. செசகோவாவை வாங்க வந்த பலர் பின்வாங்கினர். வேதாந்தா செசகோவாவை வாங்கிவிட்டது.
அப்புறம் இரண்டு மாதத்தில் சிதம்பரம் தான் விதித்த வரியை ஒரு டன்னுக்கு 50 ரூபாய் என்று குறைத்தார். அதிலும் ஒரு கொக்கி இருந்தது.... இரும்பு தாதுவில் இரும்பு 62% குறைவாய் இருந்தால் வரி 50 ரூபாய் என்று மாற்றினார். செசகோவா ஏற்றுமதி செய்த இரும்பு தாது அந்த வகையில்தான் வந்தது. ஆக நிகர லாபம் வேதாந்தாவிற்குதான்.
இரண்டு விஷயங்கள் - வேதாந்தா ஒன்றும் இந்தியாவிற்கு புதிதல்ல...! ஊழல் விஷயத்தில் காங்கிரஸ், பாஜக இரண்டும் ஒன்றுதான்...!

No comments:

Post a Comment