Wednesday 30 May 2018

The Rise of Bangladesh


வாரக்கடைசியில் முகநூலில் வெட்டியாக திரிந்த போது ஒரு ஆச்சர்யமான தகவல் கிடைத்தது. அதாவது, 2020-ல் பங்களாதேஷ் இந்தியாவை விட அதிகமான Per Capita Income கொண்டிருக்கும் என்பதுதான் அந்த ஆச்சர்யமான தகவல்.
மேலும் கொஞ்சம் தகவல்களை தேடியபோது புரிந்த விஷயம் - இந்தியாவின் பொருளாதாரம் கடந்த சில வருடங்களாக தடுமாறும் போதும், பங்களாதேஷ் பொருளாதாரம் தெளிவாக முன்னேறி கொண்டிருக்கிறது. மக்கள்தொகையும் கட்டுக்குள் இருக்கிறது. இந்த இரண்டு காரணங்களாலும்தான், பங்களாதேஷின் Per Capita Income இந்தியாவிற்கே சவால் விடுகிறது.

இந்தியாவின் தயவினால் சுதந்திரம் பெற்ற தேசம்…. சுதந்திரம் அடைந்த போது தரைமட்டமாக இருந்த தேசம்.. சுதந்திரம் அடைந்த மூன்று வருடங்களிலேயே பஞ்சத்தினால் பரிதவித்து, அமெரிக்காவின் கட்டளைகளுக்கு உட்பட்டு தானியத்தை தானமாக பெற்ற தேசம்…. ஜனநாயகம் என்பது மலராமல், பாகிஸ்தானை போல ராணுவ ஆட்சியில் சீரழிய போகிறது என்று நினைக்கப்பட்ட தேசம்….!
இப்போதோ தெற்கு ஆசியாவிலேயே வேகமாக வளரும் இரண்டாவது பொருளாதாரம்… இதே வேகத்தில் போனால் உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாகிவிடும். ஆடை ஏற்றுமதியில் உலகிலேயே இரண்டாவது இடம் (முதலிடம் சீனா… பங்களாதேஷ் சீனாவை முந்திவிடும் என்று சொல்லப்படுகிறது). உண்மையிலேயே பங்களாதேஷ் முன்னேறுகிறதா? பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் அனைவரையும் சென்றடைகிறதா?
இந்த விஷயத்தை ஆராய்வதற்கு Economic Indicators-ஐ பார்ப்பதை விட Social Indicators-ஐ பார்ப்பதுதான் சிறந்தது. உலகவங்கியின் தரவுகள் 2016 வரைதான் கிடைத்தன. இருந்தாலும் பரவாயில்லை… இந்தியாவோடு ஒப்பிட்டு சில விஷயங்களை பார்ப்போம். ரமணா ஸ்டைல் புள்ளிவிவரம்தான், கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்கள்.
Life Expectancy – இந்தியா 1990-ல் 57.9, 2016-ல் 68.6. பங்களாதேஷ் 1990-ல் 58.4, 2016-ல் 72.5. இந்தியாவை விட அதிகம்.
Birth Rate – அதாவது மக்கள்தொகையில் ஆயிரம் பேருக்கு புதிதாக எத்தனை குழந்தைகள் பிறக்கிறது என்னும் விகிதம். இந்தியா 1990-ல் 31.5, 2016-ல் 19. பங்களாதேஷ் 1990-ல் 35.4, 2016-ல் 19. இந்தியாவை விட அதிகம். இந்தியாவை விட அதிகமாக இருந்த மக்கள்தொகை வளர்ச்சி தற்போது குறைந்துவிட்டது. ஒரு பின்தங்கிய இஸ்லாமிய நாட்டிற்கு இது அபாரமான விஷயம்.
Mortality Rate under age 5 – ஆயிரம் பிறப்புகளுக்கு எத்தனை குழந்தைகள் இறக்கின்றன என்னும் விகிதம். இந்தியா 1990-ல் 125.9, 2016-ல் 43. பங்களாதேஷ் 1990-ல் 143.8, 2016-ல் 34.2. இந்தியாவை விட மோசமாக இருந்து, இப்போது இந்தியாவை விட சிறப்பாக உள்ளது.
Literacy Rate – UNESCO 2015 எஸ்டிமேட் படி இந்தியாவும், பங்களாதேஷும் ஒரே லெவல்தான்.
முக்கியமான விஷயம் – Gross Savings to GDP % - இந்தியா 1990-ல் 27%. 2007 சுபிட்ச காலத்தில் 41% ஆக உயர்ந்து, 2016-ல் 30%-ஆக குறைந்துவிட்டது. பங்களாதேஷ் 1990-ல் 16%. 2016-ல் 37%.
1991-ல் பங்களாதேஷில் 40%-ற்கும் மேற்பட்டவர்கள் மோசமான வறுமையில் வாடினர். இப்போது இந்த எண்ணிக்கை 14%-மாக குறைக்கப்பட்டுவிட்டது.
ஆக, பங்களாதேஷ் முன்னேறியிருக்கிறது என்று தைரியமாக கூறலாம்.
பங்களாதேஷின் வளர்ச்சிக்கு NGOக்கள் பெரிதும் உதவியிருக்கின்றன. முக்கியமான இரண்டு NGOக்கள் – ஒன்று, கிராமீன் பேங்க். 1970களில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வங்கி, கிராமப்புற மக்களுக்கு Unsecured Loans வழங்குகிறது. இதன் வெற்றியை பாராட்டி நோபல் பரிசே கொடுத்தனர். மற்ற நாடுகளிலும் இந்த மாடல் கடைப்பிடிக்கப்படுகிறது Grameen America கூட உண்டு..! இந்த மாடலுடைய நீட்சியாக கிராமீன் போன், கிராமீன் டெலிகாமெல்லாம் உண்டு.
பங்களாதேஷில் வங்கி மூலமான கணக்கு பரிமாற்றங்கள் அதிகரித்துவருகின்றன. தெற்காசிய சராசரியை விட அதிக சதவிகித மக்கள் வங்கி கணக்கை உபயோகிப்பதாக சொல்லப்படுகிறது. இயல்பான வளர்ச்சி…! இந்த வளர்ச்சிக்கு பின்னால் கிராமீன் இருக்கிறது.
இன்னொரு முக்கியமான NGO – BRAC… இதுவும் 1970களில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு NGO. தற்போது உலகிலேயே பெரிய NGO. ஆரம்பத்தில் கல்வியில் மட்டும் கவனம் செலுத்திய BRAC பின்னர் சுகாதாரம் முதலிய பல விஷயங்களிலும் ஈடுபட ஆரம்பித்தது.
NGOக்களின் உதவியினால் கிட்டதட்ட எல்லா குழந்தைகளும் (பெண் குழந்தைகள் உட்பட) தொடக்க கல்வியை பெற்று வருகின்றன. மேல் வகுப்பு போக போக பெண்குழந்தைகள் கற்பது குறைந்துவிடுகிறது என்றாலும், ஒரு பின்தங்கிய இஸ்லாமிய நாட்டிற்கு இது ஆரோக்கியமான வளர்ச்சிப்படி என்பதை மறுக்க முடியாது.
But, all is not well for Bangladesh…! பங்களாதேஷ் எதிர்கொள்ளும் சவால்கள் என்னவென்று பார்ப்போம்…!
ஐக்கிய நாடுகள் சபை முதன்முதலாக பங்களாதேஷை Least Developed Country மதிப்பீட்டிலிருந்து மாற்றியிருக்கிறது. 3 வருடங்களுக்கு ஒரு முறை பங்களாதேஷை மதிப்பிடுவார்கள். 6 வருட காலம் வளர்ச்சி தொடர்ந்தால் Developing Country Status தந்துவிடுவார்கள். பங்களாதேஷிற்கு இது ஒரு பெருமையான விஷயம்தான்.
ஆனால், இப்படி ஸ்டேட்டஸ் மாற்றுவது வரமா, சாபமா? ஸ்டேட்டஸ் மாறினால், ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு செய்யப்படும் ஏற்றுமதியில் சில சலுகைகளை பங்களாதேஷ் இழந்துவிடும். புதிதாக கடன்கள் பெறுவதிலும் சில சலுகைகளும் போய்விடும்.
பங்களாதேஷிற்கு இதை தவிர வேறு பல சவால்களும் உள்ளன.
தொழிலாளர் உரிமைகள், தொழிலாளர் பாதுகாப்பு இவற்றை மேம்படுத்துதல் அவசியம். வருமானத்தில் 14% துணி ஏற்றுமதியில் இருந்துதான் வருகிறது. ஒரே செக்டாரை இவ்வளவு நம்பியிருப்பது பொருளாதாரத்திற்கு ரிஸ்க்…. நகரமயமாக்கல், கட்டமைப்பு போன்ற புதிய பிரச்சனைகள் முளைத்துள்ளன…. வரும் வருடங்களில் இன்னும் அதிகமாக போகின்றன. அரசியல் இப்போது போல வரும் வருடங்களிலும் அமைதியாக, உறுதியாக இருக்குமா?
போதை மருந்து பழக்கம் பங்களாதேஷில் பரவி வருகிறது. இதை தவிர பெரிய ஆபத்து global warming ரூபத்தில் வருகிறது. பங்களாதேஷ் டெல்டா பகுதிகள் மிகுந்த தேசம்…. கடல் உயரம் அதிகரிக்கும் போது பங்களாதேஷிற்கு பலத்த அடி விழும்.
பங்களாதேஷின் வளர்ச்சியோ, தடுமாற்றமோ மற்ற வளரும் நாடுகளுக்கு பாடமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை…! கற்று கொள்ள தயாரானால், இப்போதே பங்களாதேஷிடமிருந்து கற்க இந்தியாவிற்கு பாடங்களிருக்கிறது…!

Friday 25 May 2018

Vedanta


ஸ்டெர்லைட் விவகாரம் வந்தபிறகு சில தகவல்கள் என் கண்ணில் பட்டன. படித்தவற்றை பகிர்கிறேன்.
வாஜ்பாய் அரசு பதவியேற்றவுடன், அதிதீவிரமாக, அவசர அவசரமாக disinvestment வேலைகளில் இறங்கியது. அப்போது விற்கப்பட்ட கம்பெனிகளில் இரண்டு – பாரத் அலுமினியம் கம்பெனி (Balco) மற்றும் ஹிந்துஸ்தான் ஸிங்க் (Hindustan Zinc). இரண்டு கம்பெனிகளையும் வாங்கியது.... yes, வேதாந்தா. இந்த இரண்டு கம்பெனிகளையும் அடிமாட்டு விலையில் வேதாந்தாவிற்கு விற்றதாக CAG ரிப்போர்ட்டில் கண்டித்தது குறிப்பிடத்தக்கது.
CAG கணிப்புப்படி Balco கம்பெனியை மதிப்பிட 45 நாட்கள் ஆகும். ஆனால், வெறும் 19 நாளில் Balco மதிப்பிடப்பட்டது. எந்த லட்சணத்தில் மதிப்பீடு நடந்திருக்கும்? Balco வை வேதாந்தா வாங்கிய பிறகு அதன் உற்பத்தி 90000 டன்களிலிருந்து 131400 டன்களாக உயர்ந்தது. நல்ல விஷயம் என்கிறீர்களா...? இந்த existing capacity விலை நிர்ணயிக்கும்போது கண்டு கொள்ளப்படவில்லை. சூப்பர்...!
Hind Zinc கதையும் இப்படித்தான்.... கம்பெனியை விற்பதற்கு முன் Business Plan தயாரிக்கப்படவில்லை. Hind Zinc-ற்கு சொந்தமான 6 சுரங்ககளில் ஒன்றில்தான் தாது எடுக்கப்படுவதாக கணக்கு காட்டப்பட்டது. எப்படி விலை நிர்ணயப்பட்டிருக்கும், சொல்லுங்கள்?
அப்புறம் செசகோவா (Sesagoa) என்னும் இரும்புதாது உற்பத்தி கம்பெனி. இந்த கம்பெனியை 2007-ல் மிட்சுயி ஃபின்சைடர் என்னும் ஜப்பானிய கம்பெனி வைத்திருந்தது. செசகோவாவை அந்த கம்பெனி விற்க விரும்பியது. பல பேர் கம்பனியை வாங்க போட்டியிட்டனர்.
அப்போது சிதம்பரம் நிதியமைச்சர். பட்ஜெட்டில் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். இரும்பு தாது ஏற்றுமதிக்கு, ஒரு டன்னுக்கு 300 ரூபாய் வீதம் ஏற்றுமதி வரி விதித்தார். புதிய வரியினால் செசகோவாவின் லாபம் குறையுமென்று முதலீட்டாளர்கள் பயந்தனர். பங்கு சந்தையில் பங்கு விலை 20% வீழ்ந்தது. செசகோவாவை வாங்க வந்த பலர் பின்வாங்கினர். வேதாந்தா செசகோவாவை வாங்கிவிட்டது.
அப்புறம் இரண்டு மாதத்தில் சிதம்பரம் தான் விதித்த வரியை ஒரு டன்னுக்கு 50 ரூபாய் என்று குறைத்தார். அதிலும் ஒரு கொக்கி இருந்தது.... இரும்பு தாதுவில் இரும்பு 62% குறைவாய் இருந்தால் வரி 50 ரூபாய் என்று மாற்றினார். செசகோவா ஏற்றுமதி செய்த இரும்பு தாது அந்த வகையில்தான் வந்தது. ஆக நிகர லாபம் வேதாந்தாவிற்குதான்.
இரண்டு விஷயங்கள் - வேதாந்தா ஒன்றும் இந்தியாவிற்கு புதிதல்ல...! ஊழல் விஷயத்தில் காங்கிரஸ், பாஜக இரண்டும் ஒன்றுதான்...!

Thursday 24 May 2018

பழைய இந்தியா, புது இந்தியாவில் பெட்ரோல் விலை


பழைய இந்தியா – ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 76.10. அதில் 68.50% Price to dealer. சுமார் 12.50%, 16.50% மத்திய மாநில வரிகள். 2% டீலர் கமிஷன்.
புது இந்தியா – ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 76.61. இதில் 48.50%-தான் Price to dealer. சுமார் 25.50%, 21.25% மத்திய மாநில வரிகள். 4.75% டீலர் கமிஷன்.
இது வேறு விதமான representation

மாநில வரி 5% ஏறியிருக்கிறது. மத்திய வரியோ 13% ஏறியிருக்கிறது (இரண்டு மடங்குக்கு மேல்). அத்தனை பணமும் எங்கே போச்சு…?
இதையும் தேசப்பற்று, அச்சே தின் என்று கொண்டாடி மோடிக்கு முட்டு கொடுக்க வேற லெவல் வேணும்…! 

Tuesday 22 May 2018

NPA - Updates


மோசமான 12 வாராக்கடன் கேஸ்களில் ஒன்றிற்கு விடிவுகாலம் வந்துள்ளது. பூஷன் ஸ்டீல் என்னும் கம்பெனியை டாடா ஸ்டீல் தன் உபநிறுவனம் (Subsidiary) ஒன்றின் மூலம் வாங்குகிறது. இதன் மூலமாக பூஷன் ஸ்டீலின் வாராக்கடன்கள் பிரச்சனை தீர்க்கப்படுகிறது.

பூஷன் ஸ்டீலின் வாராக்கடன் 56079 கோடிகள். டாடாஸ்டீல் 35200 கோடிகளுக்கு பூஷன் ஸ்டீலை வாங்கியுள்ளது. ஆக 63% வசூல் வந்துள்ளது. மிச்சம் 37% போச்சு.... ஆனால் வாராக்கடன்களில் இந்தளவுக்கு வந்தாலே சந்தோஷம்தான்... கொடுத்த அசலில் 90% மேல் வந்துவிட்டதாக அரசு கூறுகிறது. (பாஜக அதரவாளர்கள் 4 லட்சம் கோடி வசூல் என்று அடித்துவிட்டதெல்லாம் புருடா..!)
Insolvency and Bankruptcy Code (ICB ) மூலமாக கிடைத்த முதல் தீர்வு இது... மோடி அரசுக்கு பாராட்டுக்கள்...! இந்த வெற்றிக்கு எந்த தடையும் புதிதாக முளைக்கக்கூடாது என்று வேண்டி கொள்வோம்.
என்னடா, இப்படி சொல்கிறானே என்றால் அதில் விஷயம் இருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் எலக்ட்ரோஸ்டீல் என்னும் கம்பெனியை வேதாந்தா நிறுவனம் ஏலத்தில் எடுத்தது. இதை கொல்கத்தா கோர்ட்டும் அப்ரூவ் செய்தது. ஆனால், ஏலத்தில் போட்டியிட்ட ரினைஸன்ஸ் ஸ்டீல் என்னும் நிறுவனம் இதற்கு எதிராக தடைஉத்தரவு வாங்கியுள்ளது. ஏலம் நேர்மையாக நடக்கவில்லை என்று குற்றச்சாட்டு.
எல்லா கேஸ்களும் பூஷன் ஸ்டீல் போல வெற்றிகரமாக முடியாது என்பது ரியாலிடி.... உதாரணமாக லேன்கோ இன்ப்ராடெக், ஜோதி ஸ்டரக்சர்ஸ் போன்ற கம்பெனிகளுக்கு சரியான ஏலத்தொகை வரவில்லை. அதனால் தடைப்பட்டு இருக்கிறது. எஸ்ஸார் ஸ்டீல் விஷயத்தில் யார் ஏலம் கேட்கலாம், யார் கேட்கக்கூடாது என்று பஞ்சாயத்து ஓடுகிறது.
வாராக்கடன் வசூலிப்பு என்றால் ஜேபி இன்ப்ரா குறித்து பேசியே தீரவேண்டும்...

ஜேபி இன்ப்ரா ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி... தங்களுக்கு வீடு கட்டி தரும் என்று நம்பி பல ஆயிரக்கணக்கான மக்கள் பணம் போட, கம்பெனியோ திவாலாகிவிட்டது. சிக்கலான விஷயம் அதன் பேரண்ட் கம்பெனியான ஜேபி அசோசியேட் ஜேபி இன்ப்ராவின் நிலத்தை அடமானம் வைத்து பல கோடி கடன் வாங்கியிருக்கிறது.
வீடு கட்டி தருவார்கள் என்று நம்பி சேமிப்பு தொகை எடுத்து போட்டும், கடனை வாங்கியும் (வராத வீட்டிற்கு வருடக்கணக்கில் EMI கட்டுகிறார்கள்), பணத்தை போட்ட மக்கள்? அவர்கள் unsecured creditors கேட்டகரியில் வருகிறார்கள். அதாவது secured creditor-களான வங்கிகள் வசூலித்தது போக ஏதாவது பணம் மீதமிருந்தால்தான் மக்களுக்கு வரும். இங்கே வங்கிகளுக்கே மொத்தப்பணம் வராது என்னும் நிலைமை.
IBC சட்டத்தில் Unsecured Creditors விஷயத்தில் திருத்தம் வரவேண்டும் என்று கேட்கிறார்கள்.... பொதுமக்கள் ஒன்றும் பிஸினஸ் செய்ய வீடு வாங்கவில்லையே... End customersதானே... ஆக, இது நியாயமான வேண்டுகோள்தான். சுப்ரீம் கோர்ட் இந்த முதலீட்டாளர்களை பரிவுடன் கவனித்து வருகிறது என்பதே ஆறுதல். கூடவே உபி அரசு வேறு ஏதாவது பிரமோட்டர்களை வைத்து வீடுகளை கட்டி முடிக்க முயற்சிகள் எடுத்து வருகிறது. நல்ல விஷயம்.
ஜேபி இன்ப்ரா கம்பெனியை விற்று கடன்களை அடைக்கலாம் என்று ஏலம் நடந்தது. ஜேபி இன்ப்ரா 12500-15000 கோடிகள் விலை பெறும் என்பது நிபுணர்கள் கணிப்பு. ஆனால், லக்ஷத்வீப் என்னும் கம்பெனி 7350 கோடிக்கு கேட்டதுதான் அதிகமான ஏலத்தொகை.
ஆக, எல்லா கேஸ்களும் பூஷன்ஸ்டீல் போல பிரமாதமான வெற்றிக்கதை ஆகிவிடாது. இதுதான் ரியாலிடி. இதற்கு நடுவிலே வேண்டிய கம்பெனிக்கு விற்க சொன்னார்கள் என்று ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் வரக்கூடாது... அது கேவலமான அரசியலில் கொண்டு போய்விடும்.
அரசு செய்யவேண்டிய இன்னொரு முக்கியமான காரியம் உண்டு... அதுதான் அதிக ஜட்ஜுகளை நியமிப்பது.... வெறும் 26 ஜட்ஜுகள் இது போல 2500 கேஸ்களை கவனிக்கிறார்கள். இந்த வேகத்தில் போனால் 2030ல் கூட வாராக்கடன் பிரச்சனைகள் தீராது. மோடி அரசு தீவிரமாக செயல்படவேண்டிய ஏரியா இது...!

Wednesday 16 May 2018

கர்நாடகா தேர்தல் – What Next?


நடந்து முடிந்த கர்நாடகா தேர்தலில், காங்கிரஸால் ஆட்சியை தக்கவைத்து கொள்ள முடியவில்லை. காங்கிரஸிற்கு நாடு முழுக்க நெட்வொர்க் இருந்தாலும், கையிலே இப்போது இருப்பது இரண்டு மூன்று சிறிய மாநிலங்கள்தான். Big Brother Status காங்கிரஸிற்கு இனியும் பொருந்தாது…!
ஒரு வெற்றி கூட்டணிக்கு தலைமை ஏற்கும் பலம் அந்த கட்சியிடம் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் ஒரு அணி வந்தால் அதில் எந்த கட்சி சேரும் என்றே தெரியவில்லை. இந்த நிலையில் காங்கிரஸ், தன் பெரியண்ணன் மனோபாவத்தை விட்டுவிட்டு, பாஜகவிற்கு எதிரான அணியில் சேரவேண்டும்.
பாஜகவிற்கு எதிராக ஒரே அணி…. அந்த அணியில் காங்கிரஸும் உண்டு. இதுதான் anti-incumbancy வோட்டுகளை சிதறாமல் அள்ள ஒரே வழி… காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணி, மூன்றாவதாக ஒரு அணி என்று அமைந்தால், பாஜக எதிர்ப்பு வாக்குகள் இரண்டாக பிரிந்து மீண்டும் பாஜகதான் வரும்.
அப்படியில்லை, காங்கிரஸ் தலைமையிலே ஒரு அணி என்று ஜல்லியடிக்க ஆரம்பித்தால், காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடாமலே இருக்கலாம். சில ஆயிரம் கோடிகள் பணமாவது அந்த கட்சிக்கு மிச்சம் ஆகும்.
ஆனால் இது நடக்குமா? அடுத்த இந்திராகாந்தி என்று பிரியங்காவை கொண்டு வந்து நிறுத்துவார்கள் என்று என் மனதில் இருக்கும் பட்சி சொல்கிறது. பார்ப்போம், என்ன நடக்கிறதென்று...!

Monday 14 May 2018

Duchenne Smile


Smile – புன்னகையினால் பல ஆரோக்கிய நன்மைகள் உண்டு… மன அழுத்தம் குறையும், நோய் எதிர்ப்பு சக்தி கூடும், மற்றும் இன்னபிற சமாச்சாரங்கள்.
அதனால், பல காலமாக மருத்துவர்கள் உங்களை புன்னகைக்க சொல்கின்றனர். புன்னகை வராவிட்டால்…? பரவாயில்லை… புன்னகைப்பது போல நடியுங்கள். Fake it. காரணம், உங்கள் மூளையின் அறியாமை… நீங்கள் சந்தோஷமாக இருக்கும் போது புன்னகைப்பீர்கள் அல்லவா, அதனால் புன்னகைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்று மூளை அர்த்தம் செய்து கொள்ளும். ஆகவே, எப்போதும் புன்னகைப்பீர்.
அதுதான் கிடையாது…. உங்கள் மூளையொன்றும் அடி முட்டாளல்ல. கொஞ்ச காலத்திற்குள் உங்கள் திருட்டுத்தனம் அதற்கு புரிந்து விடும். அதற்கு பின்…? பொய்யான புன்னகை சோகத்தையே தரும்… கொஞ்ச நாளில் மூளையின் வயர் கனெக்ஷன் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உண்மையான புன்னகையும் சோகத்தையே தருகிறது..!
உண்மையான, வாய்விட்டு, மனம்விட்டு சிரிக்கும் சிரிப்பும் (Duchenne Smile…. டஷேன் என்று உச்சரிக்கவேண்டும்… கண்கள் லேசாக சுருங்கி சிரிக்கும் வலது பக்க படத்தை பாருங்கள்), பொய்யான சிரிப்பும் மூளையின் இருவேறு பகுதிகளால் தூண்டப்படுகின்றன. மூளையின் வெவ்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டவர்களை வைத்து இதை கண்டுப்பிடித்து இருக்கிறார்கள். ஆகவே, பலன்களும் வேறுபடும்.

பொய்யான சிரிப்பு ஒரு சுமை… அலுவலகங்களில், கடைகளில் வேலை பார்ப்பவர்கள் நாள் முழுவதும் பொய்யான புன்னகையை முகத்தில் அணிந்து கொண்டு வேலை பார்க்கிறார்கள். மனதின் உண்மையான உணர்ச்சியை முகம் வெளிக்காட்டாததால் அவர்கள் மனம் பாதிக்கப்படுகிறது. நாளடைவில் பாஸிட்டிவ் எண்ணங்கள் குறைந்து, நெகட்டிவ் எண்ணங்கள் மேலோங்குகிறதாம்.
So, வாய்விட்டு சிரித்தால் மட்டும் போதாது, மனம் விட்டு சிரிக்கவேண்டும். OK ?

Indian Banking - NPAs


கடந்த 3 வருடங்களில் வங்கி வாராக்கடன்கள் பல லட்சம் கோடிகள் அதிகரித்திருக்கின்றன. இது குறித்து படித்து தெரிந்து கொள்ளலாம் என்று போனதில் தலை சுற்றியதுதான் மிச்சம்....
பாஜக வெர்ஷன் – எல்லா வாராக்கடன்களும் காங்கிரஸ் காலத்தில் கொடுக்கப்பட்டது... அது எல்லாம் ஊழல்.... இப்போது நாங்கள் அனைத்து கடன்களையும் திரும்பி வசூலிக்க பார்க்கிறோம். கடன்களை வாராக்கடனாக கருதுவதற்கான நிபந்தனைகளை (NPA Norms) தீவிரமாக்கியிருக்கிறோம். அதன் காரணமாகவே வாராக்கடன்கள் அதிகரித்திருக்கின்றன.
பாஜக அல்லாதவர்கள் வெர்ஷன் – காங்கிரஸ் காலத்தில் வளர்ச்சியை கருதி கடன்கள் வழங்கப்பட்டன. பாஜகவின் தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாக (முக்கியமாக பணமதிப்பிழப்பு) வர்த்தகம் பாதிக்கப்பட்டு கடன்கள் வாராக்கடன்களாயின.
பாஜகவிற்கு வேண்டியவர்களின் கடன்கள் restructure செய்யப்பட்டது. முக்கிய வர்த்தக குழுமங்களின் (அம்பானி, ஆதானி என்று படிக்கவும்) கடன் விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. (RTI சட்டத்தின் கீழ் மனு போட்டும் விவரங்கள் மறுக்கப்பட்டுவிட்டன). இது பெரும் ஊழல்.
உண்மை இந்த இரண்டிற்கும் நடுவிலே உள்ளது. இது குறித்த தெளிவான, கட்சி சார்பில்லாத கட்டுரைகளை படித்திருந்தால், படித்தால் லிங்க் தாருங்கள். அறிவை வளர்த்து கொள்கிறேன். நட்பூக்களுக்கு நன்றி..! 

Thursday 10 May 2018

India China Border Infrastructure


இந்தியாவையும் சீனாவையும் பொதுவாக ஹிமாலய மலைத்தொடர் பிரித்து வைத்திருக்கிறது. ஆனால், அப்படி மலைத்தொடர் பிரிக்காத இடங்களில் தரமான சாலை கட்டமைப்புகள் அவசியமாயிருக்கின்றன. சாலை கட்டமைப்புகள் இரண்டு காரணங்களுக்கு தேவைப்படுகின்றன. ஒன்று, ராணுவ பயன்பாட்டிற்கு. இன்னொன்று, குடிமக்கள் வந்து குடியேறவும், வசிக்கவும்.
இதற்கு முன்பெல்லாம், எல்லையில் மக்கள் நடமாட்டம் இருந்தால் பூச்சாண்டி பிடித்து போய் விடும் ரேஞ்சிலேயே இந்தியா யோசித்து வந்தது. எல்லையிலிருந்து கிட்டத்தட்ட 50-100 கிலோமீட்டருக்கு பெரிதாக கட்டமைப்புகள் இருக்காது. கட்டமைப்புகள் இல்லாததால் மக்களும் இல்லை.... மக்கள் இல்லாததால் கட்டமைப்புகளும் இல்லை.
UPA ஆட்சிகாலத்தில்தான் கொஞ்சம் மாற்றி யோசிக்க ஆரம்பித்தார்கள். மக்கள் அதிகமாக வந்து குடியேறிவிட்டால், அந்த இடங்களுக்குள் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய மாட்டார்கள், அந்த இடத்திற்கு சீனா உரிமை கோர முடியாது என்று இந்தியா யோசித்தது. இதற்காக தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால், வேலைகள் ஒன்றும் வேகமாக நடக்கவில்லை.
எல்லையில் கட்டமைப்புகள் வேகமாக அமைக்கமுடியாததற்கு காரணங்கள் உள்ளன. முதல் காரணம், இயற்கை.... இந்திய சீன எல்லை பல இடங்களில் கடினமான புவியியல் அமைப்பும், காலநிலையும் கொண்டது. வருடத்தின் எல்லா காலங்களிலும் அங்கே பணியாற்ற முடியாது. மிக உயர்ந்த மலை பிரதேசங்களுக்கு கட்டுமான பொருட்களை எடுத்து செல்வதே கடினமான காரியம்.
செயற்கை காரணமும் உண்டு.... நம் எல்லையோர சாலைகளை அமைப்பதும், பராமரிப்பதும் Border Road Organisation எனப்படும் ராணுவ அமைச்சகத்தின் கீழ்வரும் ஒரு அமைப்பு. இந்த அமைப்பு கொஞ்ச...ம் மெது...வாக செயல்படும் அரசாங்க அமைப்பு. பல முறை அரசாங்கம் கண்டித்தும் இந்த அமைப்பு சிவப்பு நாடா நடைமுறைகளாலும், பல காரணங்களாலும் மெதுவாகத்தான் செயல்பட்டது.
2013-ல் சீன வீரர்கள் அக்சாய் சின் பகுதியில் எல்லை கடந்து வந்தனர். தற்போதைய டோக்லாம் போல அப்போதும் கொஞ்சம் பிரச்சனை ஆகி, பின்னர் சமாதானம் எட்டப்பட்டது. இதையடுத்து எல்லைப்புறத்தில் உள்கட்டமைப்பு அமைக்கும் பணியை தீவிரப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வழக்கம் போல இந்த முறையும் தாமதமானது.
சென்ற வருட டோக்லாம் சர்ச்சைக்கு பிறகு மீண்டும் எல்லையோர கட்டமைப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சிவப்பு நாடா பிரச்சனைகளை குறைப்பதற்காக ஏற்கனவே சுற்றுசூழல் விதிகள் வெகுவாக தளர்த்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் இரண்டு முக்கியமான முடிவுகளை மோடி அரசு எடுத்தது. முதல் முடிவு - சில சாலைகள் அமைக்கும் பணிகளை BRO-இடமிருந்து எடுத்து வேறு அரசு நிறுவனங்களுக்கு கொடுத்தது. (இதை 2014-லிருந்தே மோடி அரசு செய்து வருகிறது) இரண்டு, BRO-ற்கு அதிக அதிகாரங்கள் கொடுத்து சில அப்ரூவல் விதிமுறைகளை மாற்றியமைத்தது. உண்மையிலேயே பாராட்டவேண்டிய முடிவுகள்தான்.
இப்போது அரசு எல்லையோர கட்டமைப்பு திட்டத்தை முடுக்கி விட்டுள்ளது... BRO-விற்கு அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது..... நிதி ஒதுக்கியாகிவிட்டது. ஆனால், கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு எதிர்பாராத இடத்திலிருந்து எதிர்ப்பு வந்தது...!
யாரிடமிருந்து எதிர்ப்பு... சீனா? உள்ளூர் மக்கள்? கிடையாது... இந்திய ராணுவம்தான் எதிர்க்கிறது..! விசித்திரமாக இருக்கிறதல்லவா?
அருணாசல பிரதேசத்தில் டவாங் – விஜோய் நகர் இடையிலான 1500-2000 கி.மீ சாலை திட்டத்தை எடுத்து கொள்ளுங்கள். எல்லையை ஒட்டியே இந்த சாலை அமைவதாக திட்டம். இதற்காக அரசு 30000-40000 கோடி ரூபாய்களை ஒதுக்கியிருக்கிறது. நம் ராணுவத்தின் கவலை என்னவென்றால், அருமையான சாலைகளை அமைத்த பின்னர், சீனாவுடன் சண்டை வந்து நாம் தோற்று போனால், இந்த சாலைகளின் வழியே சீன துருப்புகள் வெகு எளிதாக ஊடுருவி விடும். நம்முடைய சாலைகளே நமக்கு எதிரியாகி விடும். அப்படி சாலை கட்டமைப்பு இல்லாமல் இருந்தால் சீன துருப்புகளால் இந்த கடினமான மலைகளில் ஊடுருவ முடியாது.
இது எப்படி இருக்கு? இத்தனைக்கும் சீனாவின் எல்லைப்புறம் பக்கா கட்டமைப்புகளோடு இருக்கிறது. ஒரு வேளை இந்தியா சண்டையில் வென்றால் சீனாவிற்குள்ளே வெகு எளிதாக ஊடுருவலாம், அல்லவா? ஏன் அப்படி யோசிக்கவில்லை?
காரணம், சீனாவின் ஆற்றல் அப்படி..! எல்லையிலே சாலை போடுவது என்பது வெறுமனே தாரோ, கான்கிரீட்டோ கொட்டும் சமாசாரமல்ல.... நம் ராணுவ பலத்தோடு சம்பந்தப்பட்டது. ராணுவ பலத்தையும் அதிகரித்து கொண்டு, சாலையும் போட வேண்டும். அதுதான் சிக்கல்...!
தற்போது இருக்கும் நிலவரப்படி அனைத்து பணிகளும் 2022-க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விஷயம் என்னவென்றால் சீனா தனது ராணுவ அமைப்பை சீர்திருத்தம் செய்து கொண்டிருக்கிறது. 2020-க்குள் அந்த பணியை முடிக்க போகிறது. இந்த வேலை முடிந்தவுடன் அனைத்து எல்லை பிரச்சனைகளையும் தீவிரமாக கவனிக்க (!) போவதாக சொல்லியிருக்கிறது. சீன ராணுவமும் அதிவேகமாக நவீனமாகி கொண்டிருக்கிறது.
இந்த சவாலை இந்தியாவால் சமாளிக்கமுடியுமா? பார்க்கலாம், என்ன நடக்க போகிறதென்று...! தற்சமயம் இந்திய-சீன எல்லை, ஒரு அமைதியான எல்லை.... கடந்த பல வருடங்களாக ஒரு புல்லட் கூட சுடப்படாத எல்லை..! அமைதி தொடரும் என நம்புவோம்...!

Tuesday 8 May 2018

கர்நாடகா சட்டசபை தேர்தல் - அருமையான தேர்தல்


கர்நாடக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து விவரங்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 2560 வேட்பாளர்களின் விண்ணப்ப படிவங்களை அலசி ஆராய்ந்திருக்கிறார்கள். சுவாரஸ்யமான தகவல்கள்....
மொத்த வேட்பாளர்களில் 391 வேட்பாளர்கள் மீது (அதாவது 15%) கிரிமினல் வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதிகமாக, பாஜகவின் வேட்பாளர்களில் 37% பேர் மேல் கிரிமினல் வழக்குகள் உண்டு. மற்ற கட்சிகளும் சளைத்தவை அல்ல.... காங்கிரஸ் வேட்பாளர்களில் 27%, ஜனதா தள் (செக்யுலர்) வேட்பாளர்களில் 21% பேர் கிரிமினல் வழக்கு உடையவர்கள்தான். (இது அவர்களாக ஒப்புக்கொண்டுள்ள தகவல்.... மற்றவர்கள் தகவல்களை மறைத்திருக்கவும் வாய்ப்புண்டு)
கிட்டத்தட்ட 35% வாக்காளர்கள் (883 பேர்) கோடீஸ்வரர்கள். பணம் இருந்தால்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்றாகி விட்ட நிலையில் 65% பேரிடம் ஒரு கோடி ரூபாய் பணம் கூட இல்லை என்றால் என்னால் நம்பமுடியவில்லை...! என்ன ஆச்சர்யம்..! (வெள்ளையில் இருந்தால்தான் கணக்கு காட்டவேண்டும் என்பது சிறு குழந்தைக்கும் தெரிந்த விஷயம்தானே..!)
309 பேர் PAN Number குறிப்பிடவில்லை. PAN Number குறிப்பிடவில்லையென்றால் நம்மை வங்கியில் எத்தனை கேள்விகள் கேட்கிறார்கள்? ஹ்ம்ம்ம்....!
இப்போதுதான் முக்கியமான விஷயம் வருகிறது.... 57% பேர் (1453) 12ம் வகுப்பு அல்லது அதற்கும் குறைவாக படித்தவர்கள். அதில் 102 பேருக்கு படிப்பறிவே கிடையாது.
கிரிமினல் கேஸ் இருந்தால் நம் நாட்டில் கான்ஸ்டபிளாக கூட ஆக முடியாது. ஆனால் அரசியல்வாதி ஆகலாம். சட்டத்தை வைத்து நிர்வாகம் செய்யும் அரசு அதிகாரிக்கு தனியாக படிப்பு, பரீட்சை எல்லாம் இருக்கிறது.... சட்டங்களை இயற்றும் அரசியல்வாதிக்கு படிப்பு, பரீட்சை எதுவும் கிடையாது.
இந்த நிலையில் கர்நாடகாவில் இதுவரையில் 152 கோடி ரூபாய் பணம் பிடிபட்டுள்ளது. வோட்டுக்கு காசு வாங்கும் கலாச்சாரம் அங்கும் பரவிவிட்டது.
நல்ல மக்கள், நல்ல அரசியல்வாதிகள், நல்ல தேர்தல், நல்ல விதிமுறைகள்...! சபாஷ்...!

Monday 7 May 2018

Sri Raghavendra Movie


இது ஆன்மீக பதிவு... நோ அரசியல்..!
என் பேவரைட் படங்களில் ஒன்றான ரஜினி நடித்த ஸ்ரீராகவேந்திரா படத்தை நேற்று பார்த்து கொண்டிருந்தேன். கவனம் ஈர்த்த மூன்று விஷயங்களை சொல்கிறேன். முதலில் காட்சிகளை பார்ப்போம்.
1. ஒரு வீட்டிலே சுவாமி பூஜை செய்கிறார். அச்சமயம், அந்த வீட்டு குழந்தை மாம்பழ சாறு வைத்திருக்கும் அண்டாவிலே வீழ்ந்து உயிரிழக்கிறது. சுவாமி அந்த குழந்தையை மீண்டும் உயிர்ப்பித்து தருகிறார்.
2. தீண்டத்தகாதவர் ஒருவர் சுவாமிகளின் தரிசனத்திற்கு வருகிறார். அவரை கோயிலுக்குள் நுழைய விடாமல் அந்தணர் ஒருவர் தடுக்க, சுவாமிகள் அந்த தீண்டத்தகாதவர் பக்தியுடன் சமர்ப்பிக்கும் கடுகை அன்புடன் ஏற்றுக்கொள்கிறார். ஜாதி வித்தியாசம் பார்த்த அந்த பக்தரை மந்திராட்சதையின் நிறம் மாற்றி, அவர் மனம் மாற்றி ஆட்கொள்கிறார்.
3. வெங்கண்ணா என்பவர் ஒரு கிராமத்தில் ஆடு மேய்ப்பவர். அந்த வழியே வரும் சுவாமிகளிடம் ஆசி வேண்டுகிறார். கஷ்டம் வரும் சமயத்தில் தன்னை நினைக்க, தான் அருள் புரிவதாக சுவாமிகள் கூறுகிறார். பின்னொருநாளில் நவாப் ஒருவனிடம் வெங்கண்ணா மாட்டி கொண்டு சவுக்கடி படுகிறான். அப்போது சுவாமிகளை ஸ்மரிக்க, அவன் இன்னல் தீர்கிறது…. வாழ்க்கையே மாறுகிறது.
இப்போது இதில் நான் கவனித்த விஷயங்களை சொல்கிறேன்.
1. வீட்டிலே குழந்தை இறந்த செய்தியை குடும்ப தலைவர் மற்றவரிடமிருந்து மறைக்க முயல்கிறார். காரணம்.. குழந்தை இறந்த செய்தி கேட்டால் பசியோடு வந்த ஏழைகளுக்கு உணவிட முடியாது போகும் என்பதே. தனக்கு பெரிய கஷ்டம் ஏற்பட்டபோதும் அடுத்தவர்கள் நலனை பற்றி சிந்திப்பது எவ்வளவு உயரிய குணம்..! இவருக்கு சுவாமிகள் அருள் புரிந்தது சரியே அல்லவா?
2. தீண்டத்தகாதவருக்கு அந்த காலத்தில் மகான் தரிசனம் கிடைப்பதே பெரிய விஷயம். அவரது காணிக்கையை ஏற்பது என்பது நடக்கவே முடியாத காரியம். ஆனால், எந்த நம்பிக்கையில் அந்த பெரியவர் கடுகு காணிக்கையை கொண்டு வருகிறார்? அந்த நம்பிக்கைக்கு சுவாமிகள் அருள் புரிந்தது சரியே அல்லவா?
3. கஷ்டம் இரண்டு வகைகளில் வரும்… ஒன்று நிதானமாக வந்து சேரும் வியாதி போன்ற கஷ்டங்கள்… இரண்டாவது, திடீரென்று இடி போல் வந்து சேர்வது. இப்படி இடி போன்று கஷ்டம் வந்து தலையில் விடியும் போது, உடனே கடவுளை நினைப்பது சாதாரண விஷயமல்ல. எந்நேரமும் கடவுளை ஸ்மரித்து கொண்டிருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். இப்படிப்பட்ட பக்தி கொண்டிருந்த வெங்கண்ணாவிற்கு சுவாமிகள் அருள் புரிந்தது சரியே அல்லவா?
ஆன்மீகத்தை கவனிக்காதவர்கள் கூட, படத்திலே பூர்ணம் விஸ்வநாதன், V.S. ராகவன் இருவரது நடிப்பையும் கவனிக்க வேண்டும். அந்த இடத்திலே நாம் நின்று கொண்டிருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகிறார்கள். அபாரமான நடிப்பு…!

Friday 4 May 2018

Rural Electrification


இந்தியாவின் கிராமப்புறங்கள் அனைத்திற்கும் மின்வசதி கிடைத்துவிட்டது, இது பாஜகவின் சாதனை என்றும் செய்தி வந்துள்ளது. இந்த இரண்டு விஷயங்களையும் கொஞ்சம் ஆராய்ந்து அதன் உண்மை தன்மையை அறிவோம்.
இப்போது ஒரு வரலாற்று சிறப்புமிக்க காரியம் செய்வோம். அதாவது, அடுத்த வாரத்தில் ஒரு நாள் இந்தியா முழுக்க இரவு 10 மணிக்கு அனைத்து வீடுகளிலும் மின்விளக்குகளை ஒளிர விடுவோம். அப்போது சேட்டிலைட் உதவியுடன் வானத்திலிருந்து இந்தியாவை படம் பிடித்தால் எப்படி இருக்கும்..? துணைக்கண்டமே வெளிச்சக்கடலில் மூழ்கியிருக்கும் அல்லவா...? காண கண்கொள்ளா காட்சி.... ஆனால், அப்படி ஒரு விஷயம் நடக்காது என்பதுதான் உண்மை..!
என்ன? அப்போது அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி வந்துவிட்டது என்ற செய்தி பொய்யா? பொய்யில்லை.... உண்மைதான். ஆனால் Devil is in Details... கொஞ்சம் விவரமாக பார்ப்போம்.
Village Electrification (VE) மற்றும் Household Electrification (HE) என்று இரண்டு இருக்கிறது... அதாவது, ஒரு கிராமத்தில் இருக்கும் 10% வீடுகளுக்கும், பஞ்சாயத்து அலுவலகம் போன்ற ஒருசில இடங்களுக்கும் மின் இணைப்பு வந்துவிட்டால் அந்த கிராமம் மின்வசதி பெற்றதாக (VE) கணக்கு எடுத்து கொள்ளப்படும்.
கிராமத்தில் அனைத்து வீடுகளுக்கும் மின்இணைப்பு இருக்கவேண்டும் என்பதில்லை... எல்லா குடியிருப்பு இடங்களிலிலும் மின்கம்பங்கள் இருக்க தேவையில்லை... அவ்வளவு ஏன், மின் இணைப்பு பெற்ற வீட்டிற்கு மின்சாரம் தடையின்றி கிடைக்கிறதா என்பது கூட கணக்கு இல்லை.
இதுதான் VE. ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரம் கிடைத்தால்தான் HE. இப்போது இந்திய அரசு அடைந்திருப்பதாக சொல்லப்படும் இலக்கு 100% VE.
அது என்ன ‘அடைந்திருப்பதாக சொல்லப்படும் இலக்கு’ ? - அரசு சொல்வது உண்மைதானா என்பது யாருக்கும் தெரியாது. வெவ்வேறு அரசு வலைதளங்கள், ஆப்கள் (apps) வெவ்வேறு தரவை தருகின்றன. ஒன்றுக்கொன்று முரணாகவும் இருக்கின்றன. உதா. மின் இணைப்பு கொடுத்த கிராமங்களின் எண்ணிக்கை சில மாதங்களில் அதிகரிக்கிறது, ஆனால் மின் இணைப்பு கொடுத்த வீடுகளின் எண்ணிக்கையோ குறைகிறது. இது எப்படி சாத்தியம்? (படங்களை பாருங்கள்)


ஆக, அரசு தரும் தரவு நேர்மையானதா? தெரியாது...! சரி, போகட்டும் விடுங்கள். மின் இணைப்பு கொடுத்ததாக சொல்லப்படும் கிராமங்களின், வீடுகளின் நிலைமை எப்படியிருக்கிறது?
இது குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் சில கிராமங்களை கள ஆய்வு செய்தது. உண்மையான மின்வசதி அந்த கிராமங்களை பல காரணங்களால் எட்டவில்லை என்பது அந்த ஆய்விலிருந்து புரிகிறது. கிராமங்களுக்கு மின்சாரம் ஒழுங்காக சென்றடைவதே இல்லை. எப்போது நகர்புற தேவையை மிஞ்சிய உபரி மின்சாரம் கிடைக்கிறதோ அப்போதுதான் கிராமங்களுக்கு மின்சாரம். இந்த நிலைமையில் மின்இணைப்புக்கு மாத வாடகை வேறு தரவேண்டும். ஏழ்மையின் காரணமாக அவர்களால் அந்த வாடகையை கூட தரமுடிவதில்லை... (அதற்கேற்ற மின்சாரமும் வருவதில்லை). முழு கட்டுரையும் படிக்க விரும்புபவர்களுக்கு - https://www.hindustantimes.com/…/story-pLilYKEh7At99BoSeERq…
பொய் சொல்லி மின் இணைப்பு தருவது, மக்களின் அறியாமை போன்ற மேலும் சில காரணங்கள். காரணங்கள் என்னவாயினும் நாம் அரசு தரவுகளில் பார்க்கும் நிலை வேறு, கள நிலவரம் என்பது வேறு என்பதை புரிந்து கொள்ளவேண்டும். கிராமங்களை மின்சாரம் சென்று அடைந்ததா என்பது ஒருவருக்கும் தெரியாது... இதுதான் உண்மை.
அரசு தரவுகளின் நிலையை பற்றி கூறினேன். ஆனால், நம்மிடம் இருப்பவை இந்த தரவுகள்தான். இந்த தரவுகளை வைத்துதான் நாம் analyse செய்யவேண்டும். இருக்கும் தரவுகளை வைத்தே தொடர்வோம்.
100% VE வந்ததே ஒரு சாதனைதான்... மோடியின் பாஜக அரசு காலரை தூக்கி விட்டு கொள்ளலாம்... தூங்கி வழிந்து கொண்டிருந்த காங்கிரஸை விட செயல்படும் பாஜக எவ்வளவோ சிறப்பல்லவா?
இப்படித்தான் பாஜக பிரமுகர்கள், ஆதரவாளர்கள் சொல்லி கொள்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.
மன்மோகனின் UPA அரசு ஆண்டுக்கு சராசரியாக 12000+ கிராமங்களுக்கும், 24 லட்சம்+ வீடுகளுக்கும் (Free connection to BPL Households) மின் இணைப்பு தந்திருக்கிறது. மோடியின் NDA அரசு ஆண்டுக்கு (2017 வரை) சராசரியாக ஆண்டுக்கு 4800+ கிராமங்களுக்கும், 14 லட்சம்+ வீடுகளுக்கும் மின் இணைப்பு தந்திருக்கிறது.
மன்மோகன் அரசாங்கத்தில் செயல் அதிகம், பேச்சு மிகக்குறைவு... மோடி அரசாங்கத்தில் செயல் மிகக்குறைவு, பேச்சு மிக மிக அதிகம். இதுதான் உண்மை... பாஜகவின் சாதனைகள் என்று சொல்லப்படும் விஷயங்களை தோண்டி பார்த்தால் இது போல எத்தனை உண்மைகள் வெளிவருமோ?
அடுத்து HE குறித்து காண்போம். HE என்றால் Household Electrification.
அனைத்து கிராமங்களுக்கும், வீடுகளுக்கும் மின்சாரம் என்னும் இலக்கு எப்போது நிர்ணயிக்கப்பட்டது தெரியுமா? 1978-ல்...! அப்போதைய இலக்குகள் – 1995 க்குள் 100% VE.... 2000 க்குள் 100% HE. ராஜீவ்காந்தி பெயரிலே திட்டம், தீனதயாள் பெயரிலே திட்டம், சௌபாக்யா திட்டம் என்று பல திட்டங்களின் உதவியுடன் இப்போது 2018ல் 100% VE அடைந்துவிட்டதாக கூறி கொண்டாடி கொண்டிருகிறோம். (VE என்றால் என்ன என்று முதல்பகுதியிலேயே சொன்னேன் அல்லவா? 10% வீடுகளுக்கு மின் இணைப்பு வந்தாலே அது VE கணக்கில் எடுத்து கொள்ளப்படும்)
இன்னமும் (ஆகஸ்ட் 2017 நிலவரப்படி) 23% வீடுகளுக்கு மின்இணைப்பு இல்லை. இந்த 23% வீடுகளுக்கு அடுத்த 8 மாதங்களிலோ, ஒரு வருடத்திலோ மின் இணைப்பு கொடுத்துவிடுவோம் என்று யாராவது சொன்னால் பொய் சொல்லுகிறார்கள் என்று தாராளமாக அர்த்தப்படுத்தி கொள்ளுங்கள். ஜூம்லா..!
என்ன காரணம்... மோடி அரசு மின்மயமாக்கியதாக சொல்லப்பட்ட கிராமங்களில் வெறும் 10% கூட முழுமையாக மின்மயமாகவில்லை... இதிலிருந்தே 100% HE எவ்வளவு கடினமானது என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த பணிக்கு இன்னும் சில பல வருடங்கள் ஆகும்.
சரி, இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலேயும் 23% மின் இணைப்பு கிடையாதா... ஏற்றதாழ்வுகள் உண்டா? இதில் மாநிலங்களின் செயல்பாடு எப்படி?
100% HE சாதித்த மாநிலங்கள் இந்தியாவில் ஆறு உண்டு. அவை தமிழ்நாடு, கேரளா, குஜராத், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் பஞ்சாப்..
மற்ற சில முக்கிய மாநிலங்கள் – பிராக்கெட்டில் இருப்பது இன்னும் மின் இணைப்பு தரவேண்டிய வீடுகளின் சதவிகிதம். பீஹார் (53%), ஜார்கண்ட் (56%), மத்திய பிரதேசம் (40%), ராஜஸ்தான் (23%), உத்தர பிரதேசம் (49%), அஸ்ஸாம் (47%).
ஆக, தென்னிந்தியா ஏறக்குறைய முழுமையான மின் இணைப்பு பெற்றுவிட்டது (கர்நாடகாவில் 8%, தெலுங்கானாவில் 7% வீடுகள் மட்டும் பாக்கி), வடஇந்தியாவின் நிலையை பாருங்கள்...!