Start Up India – ஞாபகம் இருக்கிறதா? கிட்டத்தட்ட இரண்டு
வருடங்களுக்கு முன்பு மோடியால் பெருமிதத்தோடு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம். இதன்
துணைதிட்டங்களாக Stand Up India (பிற்படுத்தப்பட்டோர், பெண்களுக்கானது), Deen
Dayal Yojana (கிராமபுறங்களுக்கானது) ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டன.
திட்டத்தின் நோக்கமெல்லாம் பிரமாதம்... Start Upகளில் முதலீடு
செய்ய SIDBI-க்கு 10000 கோடி நிதி... ஒரு செல்போன் இருந்தால் app மூலமாக எல்லா
அப்ரூவல்களையும் பெற்றிடலாம்... மூன்று வருடத்திற்கு வரி சலுகை... இன்னோவேஷன்களை
ஊக்கப்படுத்த திட்டம்... முத்ரா வங்கி மூலமாக 200 கோடிக்கு refinance...கோலாகலமாக
துவங்கப்பட்ட திட்டம் எப்படியிருக்கிறது?
முதல் ஒரு வருடத்திற்கு நயா பைசா கூட Start Up-களுக்கு போகவில்லை.
இந்த வருடம் வெறும் 90 கோடி ரூபாய் மட்டும் disburse ஆகியுள்ளது. காரணங்களை
ஆராய்வோம்.
முதலில், SIDBI தரும் பணம் ரொம்பவும் குறைச்சல். Start Upகளுக்கு
SIDBI நேரடியாக பணம் தராது.... Venture Capital (VC) மூலமாக பணம் தரும். யாராவது
VC 85% பணம் போட தயாராக இருந்தால், SIDBI 15% தரும். தொகை மிகவும் சொற்பம் என்று
குற்றச்சாட்டு எழுந்ததால் விதிகளில் 35% வரை SIDBI பணம் தரும் என்று
மாற்றப்பட்டது... ஆனால், உண்மையில் 20% வரைதான் தருகிறார்கள். இது மிகவும் குறைவு
என்கிறார்கள்.
அடுத்து, VC முதலில் பணம் போடுவதோடு நின்றுவிட வேண்டும். இரண்டாம்
முறை பணம் போட கூடாது என்றார்கள். Start Upகள் குறித்த புரிதல் இல்லாத விதிகள்
இவை. எந்தவொரு VCயும் மொத்த பணத்தையும் ஒரே ஷாட்டில் முதலீடு செய்யாது. பிஸினஸ்
தேவைக்கேற்ப பணத்தை சிறிது சிறிதாகத்தான் கொடுப்பார்கள். இப்போது இந்த விதியிலே
கொஞ்சம் ரிலாக்ஸ் செய்திருக்கிறார்கள்.
Start Up-ற்கு SIDBI – யிடமிருந்து பணம் வாங்குவது சாமானிய
காரியமல்ல... DIPP (தொழில்துறை வளர்ச்சி துறை) அப்ரூவ் செய்யவேண்டும். அப்புறம்
SIDBI அமைத்திருக்கும் Venture Capital Investment Committee (VCIC) அப்ரூவ்
செய்யவேண்டும். VCIC-ல் இருப்பவர்கள் பெரிய பெரிய பிஸ்தாக்கள். ஆனால், அவர்கள்
அப்ரூவ் செய்தாலும் SIDBI ஒரு due diligence நடத்தும். நடைமுறை விதிகளை படித்தால்
தலை சுற்றுகிறது. அப்ரூவல் வாங்க மாதக்கணக்கில் ஆகும்.
SIDBI அப்ரூவ் செய்ததற்கு ஒரு approval letter கூட கொடுக்க
மறுக்கிறார்கள் என்றெல்லாம் குற்றச்சாட்டு. அந்த அப்ரூவல் கடிதம் இருந்தால் அதை
வைத்தே முதலீட்டாளர்களிடம் மிச்சம் 80% பணம் திரட்டலாம். அதை கூட தரவில்லையென்றால்
எப்படி?
புதிய Start Upகள் மூன்று வருடங்களுக்கு லாபத்திற்கு வருமான வரி
கட்டவேண்டாம் என்ற சலுகை வெறும் பேப்பரில்தான் எழுத வேண்டும். காரணம், Start Upகள்
ஆரம்ப வருடங்களில் லாப நஷ்டமற்ற Break even point-ஐ அடையவே போராடி கொண்டிருக்கும்.
இதிலே,வருமான வரி சலுகையாவது? இப்போது இதை 5 வருடங்கள் என்று
மாற்றியிருக்கிறார்கள்.
சமீபத்தில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில் Start Up India திட்டத்தால்
பலன் உண்டா என்று கேட்டதற்கு 80% இல்லையென்றே கூறியுள்ளனர். GSTயினால் Start
Upகளுக்கு பாதகம் என 41% பேர் கூறியுள்ளனர். (31% பேர் சாதகம் என்றும், மற்றவர்கள்
கருத்தில்லை என்றும் சொல்லியுள்ளனர்).
இப்படியாக policy சிக்கல்களில் மாட்டி கொண்டு இந்த திட்டம் முழிக்கிறது. பிரதமரின் யோசனை நல்ல யோசனைதான். ஆனால், திட்டத்திற்கான
விதிகளை உருவாக்கியவர்கள் Start Upகளை குறித்த அடிப்படை புரிதல்கள் கூட தெரியாத
ஆட்கள் போல இருக்கிறது.
திட்டத்தை மீண்டும் முழுவதுமாக ஆய்வு செய்வது நல்லது.
இல்லையென்றால், BJP அடுத்த தேர்தலுக்கு சாதனை என்று போட்டு கொள்ள ஒரு புல்லட்
பாயிண்ட் கிடைக்கும்... அவ்வளவுதான் பிரயோஜனம்...!
No comments:
Post a Comment