ஒரு டீக்கடையில் என்ன நடக்கும்…? வெட்டி அரட்டை… நியூஸ் பேப்பரை
வைத்து கொண்டு அரசியல், சினிமா பேச்சுக்கள்… ஒரு குட்டி டிவியில் ஏதாவது ஒரு
ப்ரோக்ராம்…. இல்லையில்லை… ஒரு டீக்கடையில் மேசைக்கு மேசை டீ உறிஞ்சியபடியே செஸ்
விளையாட்டு நடக்கிறது.
மரோட்டிச்சால், வடகேரளத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம். ஐம்பது
வருடங்களுக்கு முன் சாராயம், கள்ளக்கடத்தல் என்று மக்கள் இருந்தனர்.
சாராயத்திலிருந்து மக்களை திருத்த நினைத்தார் உன்னிகிருஷ்ணன் என்பவர்.
உன்னிகிருஷ்னனுக்கு செஸ் தெரியும்… ஒரு டீக்கடை போட்டார்… டீ குடிக்க
வருபவர்களுக்கு செஸ் சொல்லி கொடுத்தார்.
கொஞ்சம் கொஞ்சமாக அந்த கிராமத்தில் செஸ் பரவியது. சாராயமும்,
கடத்தலும் ஒழிந்தது. மக்களின் நம்பிக்கையும், பொறுமையும் வளர்ந்தது… கவனம்
அதிகரித்தது. கிராமமே மாறிவிட்டது.
இந்த கிராமத்தில் இருக்கும் 6000 மக்கள் தொகையில் 4000 பேருக்கு
செஸ் தெரியும். எங்கே பார்த்தாலும் செஸ் விளையாடி கொண்டு இருக்கிறார்கள். இந்த
கிராமம் குறித்து அறிந்த விஸ்வநாதன் ஆனந்த் இவர்களுக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறார்.
தற்போதைக்கு தமிழ்நாட்டுக்கும் உன்னிகிருஷ்ணன்கள் அவசியம் என்றே
தோன்றுகிறது….
No comments:
Post a Comment