Hang சமீப காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தாளவாத்தியம் ... ஹாங்
என்று உச்சரிக்க வேண்டும். சுவிட்ஸர்லாந்தை சேர்ந்த ஃபெலிக்ஸ் ரோனர் மற்றும் சபீனா
ஷாரார் ஆகிய இருவரால் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த இசைக்கருவி பிரபலமாகி கொண்டு
வந்தாலும், இன்னும் அவ்வளவு பரவலாகவில்லை....
நம்ம ஊர் வாணலி இரண்டை ஒட்ட வைத்தது போன்ற அமைப்பு.... மேலே இருக்கும் வாணலிக்கு டிங் (Ding) என்று பெயர்... இதில் விதவிதமான ஸ்வரம் எழுப்பும் குழிகள் உள்ளன. கீழ் பக்கம் இருக்கும் வாணலிக்கு கூ (Gu) என்று பெயர். ‘கூ’-வில் சின்ன ஓட்டை இருக்கிறது. காற்று அதன் உள்ளே நுழைவதால் ஒரு வித்தியாசமான எஃபக்ட் கிடைக்கிறது.
ஹாங் இன்னும் Standardize செய்யப்படவில்லை... அதை செய்யும் உலோகத்தில், அதன் அமைப்பில் சின்ன சின்ன மாறுதல்கள் செய்து கொண்டே இருக்கிறார்கள். இப்படி மாற்றம் செய்யப்பட்ட இசைக்கருவிகளை எல்லாம் Handpan என்று அழைக்கிறார்கள். Standardize செய்யப்படாததால் ஒவ்வொரு கருவியிலும் ஒவ்வொரு விதமான இசை அனுபவம் கிடைக்கிறது. படுக்க வைத்து வாசித்தால் ஒருவிதமான ஓசைகளும், செங்குத்தாக நிற்க வைத்து வாசித்தால் வேறுவிதமான ஓசைகளும் கிடைக்கின்றன.
ஒரு சிறிய 3 நிமிட விடியோவை இங்கே தந்துள்ளேன். மேலும் இந்த இசை கேட்க விரும்புபவர்கள் யூடியூபில் சென்று Hangdrum, Handpan என்று வார்த்தைகளை கொண்டு தேடலாம்.
https://m.youtube.com/watch?v=747hJQNJpeg

No comments:
Post a Comment