Friday 16 February 2018

Yondr Your Cellphone


அடிக்ஷன் காரணமாக பலரும் செல்போன்களை எப்போதும் நோண்டி கொண்டே இருப்பதை கவனித்திருப்பீர்கள். இந்த வியாதி பரவி வருவது கவலை தரும் ஒரு விஷயம்தான்.

ஆபிஸ் மீட்டிங்கில் மேனேஜர் பேச்சை கேட்காமல்…. வகுப்பறையிலே ஆசிரியரை கவனிக்காமல்…. இசைநிகழ்ச்சிகளுக்கு சென்றால் அங்கு இசையை ரசிக்காமல்… செல்போன் நோண்டி கொண்டே இருக்கிறார்கள். திருமண விழாக்களுக்கு சென்றால் கூட செல்போனே பிரதானம்… இப்படி, செல்போனால் கவனம் சிதறுவது ஒருபக்கம் இருக்க, மனித உறவுகளும் பாதிக்கப்படுகின்றன.

இதற்கெல்லாம் ஒரு எளிய தீர்வுதான் யாண்டர் (Yondr). யாண்டர் ஒரு சின்ன ரப்பர் பௌச்.. உங்கள் செல்போனை இந்த பையினுள் போட்டுவிடவேண்டும்… சூப்பர் மார்க்கெட்டுகளில் நீங்கள் பார்க்கும் anti theft tag இந்த பையை மூடிவிடும்…. இப்போது உங்களால் செல்போனை வெளியே எடுக்க முடியாது. மீண்டும் செல்போனை எடுக்கவேண்டுமானால், நீங்கள் அதற்குரிய base station வந்துதான் அன்லாக் செய்ய வேண்டும். இனி உங்கள் கைவிரல்கள் செல்போனை நோண்டி கொண்டிருக்காது…. வாவ்!


யாண்டர் நிறுவனம் இந்த பைகளையும், base station-ஐயும் தயாரித்து வாடகைக்கு விடுகிறது. மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், இசை அரங்குகள் பலவும், மிக எளிய தீர்வான யாண்டர்க்கு மாறி வருகின்றன.

கலிபோர்னியாவில் ஒரு பள்ளி ஆசிரியர் இதுபற்றி சொல்லும்போது, “யாண்டர் வந்த பிறகு மாணவர்களின் ஒழுங்கீனம் குறைந்திருக்கிறது… கிரேடுகள் முன்னேறியிருக்கின்றன… மாணவர்கள் மேல் வந்த கம்ப்ளெயிண்டுகள் 82% குறைந்துவிட்டன” என்கிறார். வேறு ஏதாவது சைடு எஃபக்ட்…? “ஆமாம், பள்ளி வளாகம் சத்தமாகிவிட்டது. மாணவர்கள் ஒருவரோடு ஒருவர் உரையாடுகிறார்கள்… விளையாடுகிறார்கள். முன்பு போல கூட்டமாக நின்றுகொண்டு செல்போனையே பார்த்து கொண்டிருப்பதில்லை” என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார்.

வடஅமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியாவில் யாண்டர் பிரபலமாகி கொண்டு இருக்கிறது. நம்ம ஊருக்கும் யாண்டர் தேவைதான். உள்ளொழுக்கங்கள் மனிதனை வழிநடத்தாத போது, வெளிக்கட்டுப்பாடுகள் அவசியம்தானே..?

No comments:

Post a Comment