பருமனாக இருந்த முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி, 18
மாதங்களில் 108 கிலோ எடையை குறைத்து ஃபிட்டானார். அதற்கு காரணம், ருஜுதா திவேகர்
என்னும் நியூட்ரிஷனிஸ்ட்.
கரீனா கபூரின் Size Zero - வுக்கும் ருஜுதாதான்
காரணகர்த்தா...கரிஷ்மா கபூர், அனுபம் கெர், ரிச்சா சத், சயீஃப் அலி கான், அனில்
அம்பானி என்று பல படா பிரபலங்களின் ஃபிட்னஸ் ருஜுதாவின் கைவண்ணம்தான்.
இவரின் ஒரு அப்பாயிண்மென்டிற்கு பல லட்சங்களில் ஃபீஸ்
வாங்குகிறார்... இருந்தாலும் பிரபலங்கள் தங்கள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு
ருஜுதாவைதான் முதல் சாய்ஸாக தேர்ந்தெடுக்கிறார்கள்.
ருஜுதா நம்ம ஊர் பாரம்பரிய உணவுகளையே டயட்டாக பரிந்துரைக்கிறார்.
டயட் என்பது ஒரு லைஃப் ஸ்டைல். உங்கள் வாழ்க்கை முழுவதும் கடைப்படிக்க முடியாத
உணவு பழக்கம், உங்கள் டயட் ப்ளானாக மாற லாயக்கற்றது என்கிறார்.
அவரது புத்தகங்களில் ஒன்று – இந்தியன் சூப்பர் ஃபுட்ஸ்... போன
வாரம்தான் படித்தேன். நாம் எங்கு வாழ்கிறோமோ அந்த பகுதியிலேயே விளையும்
உணவுகள்தான் நமக்கு ஏற்றது என்கிறார் இவர். இறக்குமதி செய்யும் உணவுகள் நமக்கு
ஏற்றதல்ல.
மருத்துவர்களும் கார்ப்பரேட்களும் பல பொய்யான தகவல்களால் நம்மை
குழப்பி வைத்திருக்கின்றனர். அரிசி ஒரு நல்ல தானியம். வாழைப்பழம் சாப்பிடுவது
தவறல்ல. முந்திரியினால் கொலஸ்ட்ரால் ஒன்றும் ஆகாது. நெய் சேர்த்து கொள்வது உடல்
எடையை குறைக்கும். ஆந்திரா கோங்குரா (புளிச்சகீரை), தேங்காய், பலாப்பழம் அனைத்தும்
உடலுக்கு நல்லதே - இதெல்லாம் ருஜுதாவின் பரிந்துரைகள். சும்மா போகிற போக்கில்
அடித்து விடாமல், ஒவ்வொரு உணவும் என்னென்ன ஊட்டச்சத்துகளை தருகிறது.... நம்
கலாசாரத்தோடு எப்படி பின்னி பிணைந்தது என்றும் விளக்குகிறார்.
உதாரணமாக, நெய் சேர்த்து கொண்டு சாப்பிடுவதன் மூலம், உணவின்
கிளைசமிக் இண்டெக்ஸ் குறைந்து போகிறது. அதனால், நெய் சேருங்கள் என்கிறார்.
நீங்களும் அவரது புத்தகங்களை படித்து பாருங்கள்.... கண்டிப்பாக
உணவு குறித்த உங்கள் சிந்தனை மாறும். ருஜுதாவின் பேஸ்புக் பக்கம் இதோ - https://www.facebook.com/rujuta.diwekar/ அவ்வப்போது
டிப்ஸ் தருகிறார். விரும்புபவர்கள் தொடரலாம்.
No comments:
Post a Comment