டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் டெபிட் கார்டு மூலம்
ரூ.2 ஆயிரம் வரை பொருட்கள் வாங்கும்போது அதற்குரிய பரிவர்த்தனை கட்டணத்தை அரசே
ஏற்பது என்ற பரிந்துரைக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி டெபிட் கார்டு,
பி.எச்.ஐ.எம்., யு.பி.ஐ., ஆதார் மூலம் செயல்படுத்தப்படும் கட்டணம் செலுத்துதலுக்கு
ரூ.2 ஆயிரம் வரை பரிமாற்ற கட்டணம் கிடையாது.
இந்த திட்டம் 01.01.2018 முதல் அமலுக்கு வந்தது. இது 2
ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். இதன்மூலம் அரசுக்கு ரூ.2,512 கோடி இழப்பு
ஏற்படும் என்று நிதிச் சேவைகள் செயலாளர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார். - செய்தி
டிஜிட்டல் பேமெண்டுகளுக்கு கட்டணம் வசூலிப்பது ஏற்புடைய ஒன்றுதான்.
வங்கிகள் உள்கட்டமைப்புக்கு செலவழித்த தொகையை வேறு எப்படி வசூல் செய்வது...?
அடுத்த இரண்டு வருடங்களுக்கு அரசு அந்த கட்டணத்தை வரிப்பணத்திலிருந்து எடுத்து
தரப்போகிறது...
இதில் இருக்கும் பொருளாதார கொள்கை இடியாப்பத்தை நாம் புரிந்து
கொள்ளவேண்டும். கட்டணம் வசூலிக்காதே என்று அரசு வங்கிகளுக்கு சொல்ல முடியாது.
காரணம், அதனால் வங்கிகளுக்கு இழப்பு ஏற்படும். அதே சமயம், அரசின் கொள்கையான
டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்கப்படுத்தவும் வேண்டும்.
கட்டணம் அதிகம் வசூலிக்காமல் வங்கிகளை கட்டுப்படுத்துதே அரசின்
செயலாக இருக்கவேண்டும். ஆனால், அது அரசாங்கம் வர்த்தகத்தில் தலையிடும் மாபாதக (!?)
செயலாக முடிந்துவிடும். அதனால், மக்கள் வரிப்பணத்தை எடுத்து வங்கிகளுக்கு
கொடுக்கப்போகிறது.
வரிப்பணத்தை மக்களுக்கு மானியமாக கொடுத்தால் அது பொருளாதார
கொள்கைக்கு எதிரானது. ஆனால், அதே மக்கள் வரிப்பணத்தை எடுத்து வங்கிகளுக்கு
கொடுத்தால் அது ஊக்கப்படுத்தும் நடவடிக்கை. வங்கி கட்டணத்தை குறைக்குமாறு
அரசாங்கம் சொன்னால், அது வர்த்தகத்தில் தலையிடும் விஷயம்.
என்ன பொருளாதார கொள்கையோ...?
No comments:
Post a Comment