பேருந்து கட்டண உயர்வையடுத்து இரண்டு விதமான extreme சிந்தனைகளை
பேஸ்புக்கில் காண்கிறேன்.... ஒரு பக்கம், போக்குவரத்து துறையை தனியாருக்கே
தந்துவிட வேண்டும் என்பவர்கள். தொடர் நஷ்டத்தினால் மக்கள் வரிப்பணம் ஊழலில்
வீணாகிறது என்பதும், அரசாங்கம் ஏன் போக்குவரத்து தொழிலில் ஈடுபட வேண்டும் என்பதும்
இந்த கட்சியின் வாதம்.
அரசாங்கமே தனியார் பேருந்துகளையும் வாங்கிவிட வேண்டும், அல்லது தொழிலாளர்களிடமே
நிர்வாகம் வழங்கப்படவேண்டும் என்பது இன்னொரு கட்சி. அதாவது, தனியாரிடம் போகும்
லாபம் அரசாங்கத்திடம் வந்துவிடும், தொழிலாளர்கள் தம் நிறுவனம் என்ற உணர்வில்
உழைப்பார்கள் என்பது இந்த கட்சியின் சிந்தனை.
முழுமையான கம்யூனிஸமோ, முழுமையான கேபிடலிஸமோ நம்முடைய
தீர்வாகாது.... போக்குவரத்து துறையை முழுவதும் தனியாருக்கு தந்து விட்டால், லாப
நோக்கத்தில் கட்டணங்கள் அதிகரிக்கும். எல்லா ரூட்டுகளிலும் பேருந்துகள் ஓடுமா
என்பதும் சந்தேகம். லாபம் இருக்கும் ரூட்டுகளில் மட்டுமே சேவை நன்றாக இருக்கும்.
(உதா. அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களும் கார்டெல் அமைத்து கொண்டு அதிக விலை
வைத்து கொண்டிருந்தன. ஜியோ அந்த கார்டெலில் சேராத காரணத்தை முன்னிட்டே நமக்கு
இப்போது உண்மையான போட்டியின் நன்மைகள் விளைகிறது. இல்லையென்றால் தொலை தொடர்பு துறை
இன்னமும் பழைய மாதிரிதான் இருக்கும்)
முழுவதும் அரசு மயமாகிவிட்டால் அதுவும் நன்மை தராது. இப்போது
இருக்கும் ஊழல் இன்னும் பெருகத்தான் வாய்ப்பு இருக்கும். தொழிலாளர்களுக்கு
நிர்வாகம் வழங்கப்பட்டால் எந்த அளவு திறமையுடன் நடக்கும்? Accountability எப்படி
வரையறுப்பது? தனியாரின் திறமை, பணம் ஆகியவற்றை நாட்டின் வளர்ச்சிக்காக எப்படி
பயன்படுத்துவது? இதுவும் சரியாக படவில்லை.
அரசுத்துறை தன்னை மேம்படுத்தி கொண்டு தனியாருடன் போட்டியிட்டால்
மட்டுமே நன்மை. (தொலைதொடர்பு துறையில் BSNL அதை செய்யவே இல்லை. அரசியல் காரணங்கள்
சொல்கிறார்கள்)
ஆனால், அரசாங்கம் போக்குவரத்து துறை நடத்தலாமா? அது அவசியமா?
கண்டிப்பாக அவசியம்... லாபம் வராத ரூட்டுகளில் அரசாங்கம் மட்டும்தான் பேருந்து
ஓட்டமுடியும்... தனியார் முதலாளிகள் அதை செய்ய மாட்டார்கள். லாபம் வரும்
ரூட்டுகளிலிருந்து பணம் சம்பாதித்து அதை நட்டம் வரும் ரூட்டுகளில் பேருந்து ஓட்ட
பயன்படுத்த வேண்டும்.
இதுதான் சரியான லாபநோக்கமில்லாத சேவை... லாபம் தரும் ரூட்டுகளிலும்
நிர்வாக திறமையின்மை, ஊழல் காரணமாக நஷ்டம் சம்பாதிக்க கூடாது.... அரசுத்துறை லாப
நோக்கமில்லாது இயங்கலாம்... அதற்காக நஷ்டப்படவேண்டும் என்பது அர்த்தமல்ல...!
கேபிடலிஸத்தில் சொல்லப்படும் போட்டியின் மூலமாக கிடைக்கும்
நன்மைகளும், சேவை மேம்பாடும் கிடைக்க வேண்டும்.... தனியார் முதலாளிகள் பேருந்து
விடாத ரூட்டுகளிலும் போக்குவரத்து சேவை நடக்க வேண்டும். நம் நாட்டின் நிலைமைக்கு,
இதுதான் நாம் எதிர்பார்க்க வேண்டிய தீர்வு. 100% கம்யூனிசமோ, கேபிடலிஸமோ அல்ல...!
இஸங்களில் மாட்டிக்கொள்ளாது தீர்வுகளை நோக்கி நகரவேண்டும்.
No comments:
Post a Comment