Sunday 31 December 2017


அமெரிக்காவில் செட்டிலாவது, பல இந்தியர்களின் கனவு. ஆனால், அந்த கனவின் பின்னால் இருக்கும் நிதர்சனம் என்ன...? உண்மையிலேயே இந்தியர்களுக்கு அமெரிக்க வாழ்க்கை சந்தோஷம் தருகிறதா?
அமெரிக்காவிலே இருக்கும் NRI ஒருவர் சின்னதாக தன் நட்பு வட்டத்திலே ஒரு சர்வே செய்திருக்கிறார். தன் சர்வே முடிவை பலரும் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறுகிறார். (ரொம்ப authentic-ஆக எடுத்து கொள்ள முடியாது. ஒரு ஐடியா கிடைக்கிறது, அவ்வளவே)
ஒரு படம் ஆயிரம் கதை சொல்லும் என்பது போல ஒரு வரைபடத்தில் விஷயத்தை சொல்லிவிட்டார். முழுவதுமாக படிக்க விரும்புவர்கள் லிங்கிலே சென்று பார்க்கவும்.

Thursday 28 December 2017

ஐசிஐசிஐ வங்கி, ஐசிஐசிஐ காப்பீடு நிறுவனம் – மோசடி


ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு புதிய மோசடியை கண்டுபிடித்துள்ளனர். மோசடியை செய்தது நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளுள் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி மற்றும் காப்பீடு நிறுவனத்தின் அதிகாரிகள்.
படிப்பறிவில்லாத, சூதுவாது தெரியாத, விவசாயிகள், விதவைகள், சாதாரண கூலிகள்தான் இவர்களது டார்கெட். ஏதோ ஒரு வகையில் இந்த அப்பாவிகளிடம் கொஞ்சம் sizable பணம் வருகிறது. நிலம் விற்ற காசோ, வாழ்நாள் முழுக்க வேலை செய்ததற்கு கிராஜுவிட்டி பணமோ, கணவன் இறந்ததற்கு நஷ்டஈடோ ஏதோ ஒரு வகையிலே பணம் கிடைக்கிறது என்று வைத்து கொள்ளுங்கள். அதை ஒரு வைப்பு நிதியில் (Fixed deposit) போட்டால், அதில் வரும் வட்டியை கொண்டு வயிற்றை கழுவலாமே என்று நினைப்பார்கள்.
பணத்தை கொண்டு போய் ஐசிஐசிஐ வங்கி அதிகாரிகளிடம் கொடுத்து வைப்பு நிதியில் போட சொல்கிறார்கள். வங்கி அதிகாரி ஆங்கிலம் புரியாத (அல்லது படிப்பறிவில்லாத) அவர்களுக்கு விண்ணப்பம் நிரப்பி, கையெழுத்து பெற்று கொள்கிறார். தங்கள் பணம் பத்திரமாக வங்கியில் இருப்பதாக அவர்கள் நம்பிக்கையுடன் வீட்டுக்கு செல்கிறார்கள்.
ஆனால், அவர்கள் பணம் கட்டியது வைப்பு நிதிக்கு அல்ல…. மாறாக காப்பீடு திட்டத்திற்கு. அடுத்த தவணை பிரீமியம் கட்டவில்லை என்றால் அவர்கள் கட்டிய பணமும் பறிபோய்விடும்.
இப்படித்தான், சோஹன்தாஸ் என்னும் முதியவர் தன் வயதான காலத்தில் தன்னிடம் இருந்த கடைசி துண்டு நிலத்தை 7,50,000 ரூபாய்க்கு விற்று, அந்த பணத்தை வைப்பு நிதியில் போட்டிருக்கிறார். 9 மாதங்கள் கழித்து ஒரு போன்கால்….. மேலும் 7,50,000 ரூபாய் கட்டவில்லையென்றால், ஏற்கனவே கட்டிய பணமும் போய்விடும் என்கிறார்கள். அவர் பதறியடித்து கொண்டு ஒரு வக்கீலிடம் போய் தன்னிடம் இருந்த வைப்பு நிதி பத்திரத்தை காட்டினால், வக்கீல் அதை காப்பீடு பத்திரம் என்று சொல்லி விட்டார். அவர் ஒவ்வொரு வருடமும் இதுபோல 7,50,0000 கட்டவேண்டும். பணத்திற்கு அவர் எங்கே போவார்? அவர் ஏற்கனவே கட்டிய ரூபாய் 7,50,0000?
இது போல பல கேஸ்கள்… வங்கியில் கடன் வாங்குபவரிடம் கூட, ஒரு தொகையை வைப்பு நிதியில் வைக்க வேண்டும் என்று கூறி, அந்த பணத்திற்கு காப்பீடு திட்டம் விற்றுவிட்டனர் வங்கி அதிகாரிகள்.
அவ்வளவு எளிதாக ஏமாற்றி, மோசடி செய்து காப்பீடு விற்க முடியுமா? முடியாதுதான்… அதற்காக வேறு என்னவெல்லாம் செய்தார்கள்? டாகுமெண்டுகளில் பொய் விவரம் அளித்தனர் (வாடிக்கையாளரின் கல்வி தகுதி, வருமானத்தை ஏற்றி காட்டுவது, வயதை குறைப்பது), பிரீமியம் 50,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் Form 61ல் அதிகாரிகளே பொய் கையெழுத்து போடுவது, IRDA சொல்லியுள்ள விதிகளை பின்பற்றாதது, காப்பீடு கம்பெனியின் கஸ்டமர் கால் சென்டருக்கு வாடிக்கையாளர் போல போனில் பேசுவது, பொய் சாட்சி கையெழுத்துக்கள்… அடேங்கப்பா!
இந்த மோசடிகள் வெளிவர காரணமாக இருந்தவர் – அதே நிறுவனத்தில் பணிபுரிந்த பால்சந்தானி என்பவர். அங்கு நடக்கும் மோசடிகளை மேலதிகாரிகளிடம் சொல்ல, அவரை வேலையை ராஜினாமா செய்ய வைத்தனர். பால்சந்தானி, இப்போது இப்படி ஏமாந்து போன மக்களுக்காக போராடி கொண்டிருக்கிறார். இதுவரை 400 பேர்களின் பணத்தை மீட்டு கொடுத்திருக்கிறார்.
பால்சந்தானி நாட்டின் முன்னனி வங்கியோடு மோதுகிறார்… அவ்வளவு எளிதாக இருக்குமா அவரது போராட்டம்? அவர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டது. அதிலிருந்து விடுவிக்கப்பட்டாலும், மீண்டும் தேவையில்லாமல் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து போராடுகிறார்.
பால்சந்தானி சொல்லும் விஷயங்கள் அதிர்ச்சியளிக்கின்றன… இந்த மோசடியானது, அதிகாரிகள் மட்டும் தொடர்புடையது அல்ல… இது இரண்டு நிறுவனங்களுக்கும் தெரிந்தே நடந்த மோசடி என்கிறார். இது போலத்தான் பல தனியார் காப்பீடு நிறுவனங்கள் காப்பீடு விற்கின்றன என்று குற்றம் சாட்டுகிறார். அடையவே முடியாத டார்கெட்டுகளை விற்பனை அதிகாரிகளுக்கு கொடுத்து அவர்களை மோசடி செய்ய தனியார் நிறுவனங்கள் தூண்டுகின்றன என்கிறார்.
இவர்கள் மோசடி செய்ய எது வசதி செய்து தருகிறது தெரியுமா? டேட்டாபேஸ்…. Know Your Customer என்று ஒவ்வொரு வாடிக்கையாளரும் தரும் படிவங்கள், இது போன்ற நிறுவனங்களுக்கு பொக்கிஷம்… எந்த வாடிக்கையாளரை குறி வைக்கலாம் என்று தீர்மாணிப்பது எளிதல்லவா?
நாடு முழுவதும் எத்தனை படிப்பறிவில்லாதவர்கள்? இந்த விவகாரத்தை தோண்டினால் இன்னும் எத்தனை மோசடிகள் வருமோ?

Wednesday 27 December 2017

மாண்டோவி நதிநீர் பங்கீடும் பாஜகவின் தண்ணீர் அரசியலும்


கோவா மாநிலத்தின் உயிர் நதிகள் இரண்டு. ஒன்று ஸுவாரி, இன்னொன்று மாண்டோவி. கோவா சென்றவர்கள் கண்டிப்பாக பன்ஜிம் நகரில் cruise (உல்லாச படகு) போயிருப்பார்கள்... ரொம்பவே பிரசித்தம். அந்த நதிதான் மாண்டோவி (கர்நாடகாவில் மஹதாயி என்பார்கள்).
மாண்டோவி கர்நாடகாவில் உற்பத்தி ஆகி கோவா வழியாக சென்று கடலிலே கலக்கிறது. இந்த மாண்டோவி நதி நீரை பங்கீடு செய்து கொள்வதற்குதான் பல ஆண்டுகளாக கர்நாடகமும் கோவாவும் அடித்து கொள்கின்றன.
கோவா, கர்நாடகா, தெற்கு மஹாராஷ்டிரா பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலைகளின் புண்ணியத்தால் நல்ல மழையை பெறுகின்றன. ஆனால், தண்ணீரை தேக்கி வைக்க வசதிகள் இல்லை. வெயில் காலத்திலும், அல்லது வானம் கொஞ்சம் பொய்த்தாலும் தண்ணீர் கஷ்டம் வந்துவிடும். வடக்கு கர்நாடகத்தில் குடிக்க கூட தண்ணீர் கிடைக்காது.

அதனால், மாண்டோவிக்கு கலசா மற்றும் பண்டூரி என்னும் துணைநதிகளில் இருந்து பாயும் தண்ணீரில் இருந்து ஏழெட்டு TMC தண்ணீரை மலப்ரபா என்னும் நதியோடு இணைந்த கால்வாயாக மாற்ற வேண்டும் என்பது கர்நாடகாவின் திட்டம். இது கர்நாடகாவில் மூன்று மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும்.
ஆனால், கர்நாடகாவின் ஏமாற்றுத்தனத்தை கோவா நன்கு அறியும். முதலில் குடிநீர் தேவை என்று ஆரம்பித்து, பின்னர் விவசாயத்திற்கு தண்ணீர் விட்டு விடுவார்கள் என்று கூறி கோவா திட்டத்திற்கு சம்மதிக்கவில்லை. மேலும், இந்த திட்டங்களால் காடுகள் வெகுவாக அழிந்துவிடும், சுற்றுசூழல் பெரிதாக பாதிக்கப்படும் என்பதும் உண்மையான குற்றச்சாட்டு.
நதிநீர் ஆணையம் அமைக்கவே இழுத்தடித்து 2010ல்தான் ஆரம்பித்தார்கள். அப்படியும் பேச்சுவார்த்தையில் ஒன்றும் முன்னேற்றமில்லை. கர்நாடகா ஏதாவது செய்ய ஆரம்பித்தால் நீதிமன்றத்திற்கு சென்று ஸ்டே வாங்கிவிடுவார்கள். அப்புறம் திட்டம் கிணற்றில் போட்ட கல்தான்.
இப்போது கோவாவில் பாஜக ஆட்சி, கர்நாடகாவில் தேர்தல் வரப்போகிறது. இந்த நிலையிலே பாஜகவின் முதல்வர் வேட்பாளராக கருதப்படும் எடியூரப்பா தனது அரசியலை ஆரம்பித்தார். மத்திய அரசின் (அமித்ஷாவின்) செல்வாக்கோடு தண்ணீர் பெற்று தந்தால் வடக்கு கர்நாடகாவில் ஒரு 50 சீட் தேறும் என்று கணக்கு போட்டார். இதற்கு பேச்சு வார்த்தைகளும் நடந்தன.
பின்னர், கோவா முதல்வர் பரிக்கர், மாண்டோவி நதியின் நீரை பங்கீடு செய்ய கர்நாடகாவிற்கு சாதகமாக தனக்கு கடிதம் அனுப்பியதாக அறிவித்தார். விவசாயிகள் துள்ளி குதித்தனர்... தங்கள் கஷ்டம் தீர்ந்தது என்று நினைத்தனர். கர்நாடக காங்கிரஸ் அரசு பெரிதாக அலட்டி கொள்ளவில்லை. பரிக்கர் அப்படி கடிதம் எழுதினால், முதல்வரான சித்தராமையாவுக்குதான் கடிதம் எழுதவேண்டும். எடியூரப்பா கூறுவது பொய் என்று விட்டது.
அதுதான் நடந்தது... கோவாவின் நீர்வளத்துறை அமைச்சர், கர்நாடகவிற்கு சொட்டு நீர் கூட அதிகம் கிடையாது என்று சொல்லிவிட்டார். இப்போது விவசாயிகள், பொதுமக்களின் கோபம் பாஜக மேல் திரும்பியுள்ளது. தாங்கள் ஏமாற்றப்பட்டதாக நினைக்கும் மக்கள் செம கடுப்பில் உள்ளனர். இன்று வடக்கு கர்நாடகாவில் பந்த்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் மூன்று... ஒன்று, பாஜகவின் அசிங்கமான நீர் அரசியல். வரும் சட்டமன்ற தேர்தலில் வெல்வதற்காக கோவா மற்றும் கர்நாடகா மாநில மக்களை ஏமாற்ற தயாரானதே ஒழிய நீண்டகால நோக்கில் மழைநீரை எப்படி சேமிக்கலாம் என்றோ, எப்படி பயன்படுத்தலாம் என்றோ அதற்கு கவலையே இல்லை. தேர்தலில் வென்றால் போதும். இதுதான் பாஜகவின் மனநிலை. காவிரி விஷயத்தில் தமிழகத்தை பாஜக எப்படி ஏமாற்றுகிறது என்பது அனைவரும் அறிந்ததே.
இரண்டு, இதே கர்நாடகா தமிழகத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எவ்வளவு எதிர்ப்பு தெரிவித்தது? தனக்கு வந்தால் ரத்தம், தமிழகத்திற்கு தக்காளி சட்னியா? கர்நாடகம் விவசாயிகள் ஓட்டுக்காக இரட்டை வேடம் போட தயாராக இருக்கிறது.
மூன்று, காவிரியை போலவே மாண்டோவியும் கர்நாடகாவிலேதான் உற்பத்தி ஆகிறது. கோவா மாநிலம், கட்சி பேதமின்றி கர்நாடகத்தின் கண்ணிலே விரலை விட்டு ஆட்டுகிறது.... தமிழகமோ கர்நாடகாவிடம் வருடாவருடம் தண்ணீர் பிச்சை கேட்கிறது... இந்த வருடம் கர்நாடகாவில் தேர்தல்... காவிரி தண்ணீர் குறித்து என்ன வாக்குறுதிகளை கர்நாடக அரசியல்வாதிகள் அள்ளி வீச போகிறார்களோ... தமிழகத்திற்கு தண்ணீர் வருமா?

Thursday 21 December 2017

Jerusalem Issue - Trump's Mistake


ஜெருசலம் விஷயத்தில் அமெரிக்கா தவறுக்கு மேல தவறு செய்வதாக தோன்றுகிறது.... ஐக்கிய நாடுகள் பொது சபையில் தங்களுக்கு எதிராக வோட்டு போடும் நாடுகளுக்கு நிதியுதவி செய்ய போவதில்லை என்று மிரட்டியுள்ளது.

ஏற்கனவே செக்யூரிட்டி கவுன்சிலில் அனைத்து நாடுகளும் அமெரிக்காவிற்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்துள்ளது. அமெரிக்காவின் முடிவு சட்டவிரோதம் என்று மற்ற நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.

கூட்டாளிகளை தயார் படுத்தி கொள்ளாமல் அமெரிக்கா தன்னிச்சையாக ஜெருசலம் குறித்து அறிவித்ததே தவறு. ஐரோப்பிய யூனியன், சவுதி அரேபியா, ஈரான், சைனா – ஒருவர் கூட ஆதரிக்கவில்லை. யாருமே ஆதரிக்காத பட்சத்தில் ஒதுங்குவதுதான் நல்லது.... 

அனுபவமில்லாத ட்ரம்ப் இன்னும் என்னென்ன செய்ய போகிறாரோ..?

Wednesday 20 December 2017

Start Up India - Review


Start Up India – ஞாபகம் இருக்கிறதா? கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்பு மோடியால் பெருமிதத்தோடு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம். இதன் துணைதிட்டங்களாக Stand Up India (பிற்படுத்தப்பட்டோர், பெண்களுக்கானது), Deen Dayal Yojana (கிராமபுறங்களுக்கானது) ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டன.
திட்டத்தின் நோக்கமெல்லாம் பிரமாதம்... Start Upகளில் முதலீடு செய்ய SIDBI-க்கு 10000 கோடி நிதி... ஒரு செல்போன் இருந்தால் app மூலமாக எல்லா அப்ரூவல்களையும் பெற்றிடலாம்... மூன்று வருடத்திற்கு வரி சலுகை... இன்னோவேஷன்களை ஊக்கப்படுத்த திட்டம்... முத்ரா வங்கி மூலமாக 200 கோடிக்கு refinance...கோலாகலமாக துவங்கப்பட்ட திட்டம் எப்படியிருக்கிறது?
முதல் ஒரு வருடத்திற்கு நயா பைசா கூட Start Up-களுக்கு போகவில்லை. இந்த வருடம் வெறும் 90 கோடி ரூபாய் மட்டும் disburse ஆகியுள்ளது. காரணங்களை ஆராய்வோம்.
முதலில், SIDBI தரும் பணம் ரொம்பவும் குறைச்சல். Start Upகளுக்கு SIDBI நேரடியாக பணம் தராது.... Venture Capital (VC) மூலமாக பணம் தரும். யாராவது VC 85% பணம் போட தயாராக இருந்தால், SIDBI 15% தரும். தொகை மிகவும் சொற்பம் என்று குற்றச்சாட்டு எழுந்ததால் விதிகளில் 35% வரை SIDBI பணம் தரும் என்று மாற்றப்பட்டது... ஆனால், உண்மையில் 20% வரைதான் தருகிறார்கள். இது மிகவும் குறைவு என்கிறார்கள்.
அடுத்து, VC முதலில் பணம் போடுவதோடு நின்றுவிட வேண்டும். இரண்டாம் முறை பணம் போட கூடாது என்றார்கள். Start Upகள் குறித்த புரிதல் இல்லாத விதிகள் இவை. எந்தவொரு VCயும் மொத்த பணத்தையும் ஒரே ஷாட்டில் முதலீடு செய்யாது. பிஸினஸ் தேவைக்கேற்ப பணத்தை சிறிது சிறிதாகத்தான் கொடுப்பார்கள். இப்போது இந்த விதியிலே கொஞ்சம் ரிலாக்ஸ் செய்திருக்கிறார்கள்.
Start Up-ற்கு SIDBI – யிடமிருந்து பணம் வாங்குவது சாமானிய காரியமல்ல... DIPP (தொழில்துறை வளர்ச்சி துறை) அப்ரூவ் செய்யவேண்டும். அப்புறம் SIDBI அமைத்திருக்கும் Venture Capital Investment Committee (VCIC) அப்ரூவ் செய்யவேண்டும். VCIC-ல் இருப்பவர்கள் பெரிய பெரிய பிஸ்தாக்கள். ஆனால், அவர்கள் அப்ரூவ் செய்தாலும் SIDBI ஒரு due diligence நடத்தும். நடைமுறை விதிகளை படித்தால் தலை சுற்றுகிறது. அப்ரூவல் வாங்க மாதக்கணக்கில் ஆகும்.
SIDBI அப்ரூவ் செய்ததற்கு ஒரு approval letter கூட கொடுக்க மறுக்கிறார்கள் என்றெல்லாம் குற்றச்சாட்டு. அந்த அப்ரூவல் கடிதம் இருந்தால் அதை வைத்தே முதலீட்டாளர்களிடம் மிச்சம் 80% பணம் திரட்டலாம். அதை கூட தரவில்லையென்றால் எப்படி?
புதிய Start Upகள் மூன்று வருடங்களுக்கு லாபத்திற்கு வருமான வரி கட்டவேண்டாம் என்ற சலுகை வெறும் பேப்பரில்தான் எழுத வேண்டும். காரணம், Start Upகள் ஆரம்ப வருடங்களில் லாப நஷ்டமற்ற Break even point-ஐ அடையவே போராடி கொண்டிருக்கும். இதிலே,வருமான வரி சலுகையாவது? இப்போது இதை 5 வருடங்கள் என்று மாற்றியிருக்கிறார்கள்.
சமீபத்தில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில் Start Up India திட்டத்தால் பலன் உண்டா என்று கேட்டதற்கு 80% இல்லையென்றே கூறியுள்ளனர். GSTயினால் Start Upகளுக்கு பாதகம் என 41% பேர் கூறியுள்ளனர். (31% பேர் சாதகம் என்றும், மற்றவர்கள் கருத்தில்லை என்றும் சொல்லியுள்ளனர்).
இப்படியாக policy சிக்கல்களில் மாட்டி கொண்டு இந்த திட்டம் முழிக்கிறது. பிரதமரின் யோசனை நல்ல யோசனைதான். ஆனால், திட்டத்திற்கான விதிகளை உருவாக்கியவர்கள் Start Upகளை குறித்த அடிப்படை புரிதல்கள் கூட தெரியாத ஆட்கள் போல இருக்கிறது.
திட்டத்தை மீண்டும் முழுவதுமாக ஆய்வு செய்வது நல்லது. இல்லையென்றால், BJP அடுத்த தேர்தலுக்கு சாதனை என்று போட்டு கொள்ள ஒரு புல்லட் பாயிண்ட் கிடைக்கும்... அவ்வளவுதான் பிரயோஜனம்...!

Friday 15 December 2017

Choco Pie-யும் ஜனநாயகமும்


வடகொரியாவில் இருக்கும் மக்களுக்கு தொழில் வாய்ப்பளிக்கவும், அதே சமயம் தங்கள் நாட்டு கம்பெனிகளுக்கு குறைந்த கூலியில் தொழிலாளர்கள் கிடைக்கவும், தென்கொரியா கே ஸாங் என்னும் இடத்திலே ஒரு தொழிற்பூங்காவை அமைத்தது. தன் நாட்டுக்குள் தென்கொரியா தொழிற்பூங்கா அமைக்க வடகொரியா எப்படி ஒப்புக்கொண்டது...? ஏதோ ஒரு விதத்தில் காசு வந்தால் சரி என்பதே காரணம்... வடகொரியாவின் பொருளாதாரம் அப்படி படுத்து கிடக்கிறது.
அவ்வபோது வடகொரியா இந்த தொழிற்பூங்காவை மூடினாலும் ஏதோ ஒரு விதத்தில் 124 தென்கொரிய கம்பெனிகள் இங்கு தம் பொருட்களை உற்பத்தி செய்து கொண்டிருந்தன. அதில் ஒரு கம்பெனி தன் ஊழியர்களை ஊக்கப்படுத்த சாக்கோ பை எனப்படும் இனிப்பு தின்பண்டத்தை தந்தது.
தென்கொரியர்களுக்கு சாக்கோ பை 70களில் இருந்து கிடைக்கும் ஒரு சாதாரண தின்பண்டம். ஆனால் வடகொரியர்கள் 2004ல்தான் முதன்முறையாக அதை பார்க்கிறார்கள். அவர்களுக்கு சாக்கோபை என்பது வெறும் தின்பண்டமல்ல... தென்கொரியாவின் சுபிட்சத்தின் அடையாளம்.... தென்கொரியர்கள் நம்மை விட மோசமாக வாழ்கிறார்கள் என்ற அரசாங்க பிரச்சாரத்தை உடைத்த ஒரு ஆதாரம். தென்கொரியா உண்மையிலேயே வளமாக இருக்கிறது என்பதை வடகொரியர்கள் உணர்ந்தனர்.
அப்படி ஒரு இனிப்பை இது வரை சுவைத்திராத வட கொரிய தொழிலாளிகள் அதை சுவைத்து மகிழ்ந்தனர். ஓவர் டைம் செய்தால் அதிக சாக்கோ பை.... தின்பண்டத்திற்கு ஆசைப்பட்ட தொழிலாளர்கள் தென்கொரிய கம்பெனிக்கு அதிக உழைப்பை கொட்டினர்.
தொழிலாளர்கள் தாங்கள் சாக்கோ பையை சுவைத்ததோடு மட்டுமில்லாமல், கள்ளமார்கெட்டிலும் விற்றனர். இதையறிந்த வட கொரிய அரசு தொழிலாளர்களுக்கு சாக்கோ பை தர தடைவிதித்ததும், தாங்களே சாக்கோ பை உற்பத்தி செய்ய முயன்று தோற்றதும் வேறு கதை.
இப்போது மெயின் கதைக்கு வருவோம். போன மாதம், ஓஹ்-சுங்-சங் (Oh Chung Sung) என்னும் வடகொரிய ராணுவ வீரர் தென்கொரியாவிற்கு தப்பி செல்ல திட்டம் தீட்டினார். அவர் தப்பித்து வந்த ஜீப் துரதிர்ஷ்ட வசமாக ஒரு பள்ளத்திலே மாட்டிக்கொண்டது. வடகொரிய வீரர்கள் அவரை நோக்கி 40 முறை சுட்டனர். அதில் 5 குண்டுகள் அவர் மீது பாய்ந்தது. தன் மேல் இலை குப்பைகளை போட்டுக்கொண்டு அசையாமல் படுத்திருந்து உயிர் தப்பினார் நமது ஹீரோ.
தென்கொரிய ராணுவம் தெர்மல் சென்ஸார்கள் உதவி கொண்டு அவரை கண்டுபிடித்து காப்பாற்றினர். குண்டுகளை எடுக்க அவருக்கு ஆபரேஷன் செய்தபோதுதான், அவரது வயிற்றில் பெரிது பெரிதாக ஏராளமான புழுக்கள் இருப்பதை அறிந்தனர். ஓஹ்-வுடைய நிலைமையை கருத்தில் கொண்ட டாக்டர்கள் ஆபரேஷனுக்கு இடையிலே அந்த புழுக்களை அவசரவசரமாக வெளியே எடுத்தனர்.
ஓஹ் வயிற்றில் அவ்வளவு புழுக்கள் எப்படி வந்தது? வடகொரியாவில் பலரது வயிற்றில் இப்படித்தான் புழுக்கள் இருக்கிறது என்கிறார்கள். காரணம், 2014ல் சர்வாதிகாரி கிம் போட்ட முட்டாள்தனமான உத்தரவு. பயிர்கள் நன்றாக விளைய மனித கழிவை போட சொன்னார். (உரம் வாங்க காசு இருந்திருக்காது என்று நினைக்கிறேன்) வேறு வழியில்லாமல் விவசாயிகளும் விலங்கு கழிவோடு, மனித கழிவுகளையும் சேர்த்து உரமாக பயன்படுத்தி வருகின்றனர். அதுதான் வயிற்றில் இருக்கும் புழுக்களுக்கு காரணம்.

ஓஹ் சிகிச்சை முடிந்து, நினைவு திரும்பி கண் விழித்ததும் முதலில் கேட்டது – ஒரு சாக்கோ பை. சாக்கோ பை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று அவருக்கு 100 டப்பாக்கள் சாக்கோ பை தந்தது... அதோடு ஆயுளுக்கும் இலவசமாக சாக்கோ பை தருவதாக அறிவித்துள்ளது.
நம் நாட்டிலும் சில பேர் “சர்வாதிகாரம் வந்தாதான் சார், நாடு முன்னேறும்.... எமர்ஜென்ஸி வந்த போது விலைவாசி குறைந்தது....” என்றெல்லாம் பினாத்துகிறார்கள்... அவர்கள் சுபிட்ச பூமியான வடகொரியாவிற்கு செல்லட்டும்.... கிம், சாக்கோ பை கொடுத்து இரு கரம் நீட்டி வரவேற்க காத்திருக்கிறார்.

Wednesday 13 December 2017

மரோட்டிச்சால் - டீக்கடைக்காரர் ஒரு கிராமத்தை குடிபோதையிலிருந்து மீட்ட கதை


ஒரு டீக்கடையில் என்ன நடக்கும்…? வெட்டி அரட்டை… நியூஸ் பேப்பரை வைத்து கொண்டு அரசியல், சினிமா பேச்சுக்கள்… ஒரு குட்டி டிவியில் ஏதாவது ஒரு ப்ரோக்ராம்…. இல்லையில்லை… ஒரு டீக்கடையில் மேசைக்கு மேசை டீ உறிஞ்சியபடியே செஸ் விளையாட்டு நடக்கிறது.
மரோட்டிச்சால், வடகேரளத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம். ஐம்பது வருடங்களுக்கு முன் சாராயம், கள்ளக்கடத்தல் என்று மக்கள் இருந்தனர். சாராயத்திலிருந்து மக்களை திருத்த நினைத்தார் உன்னிகிருஷ்ணன் என்பவர். உன்னிகிருஷ்னனுக்கு செஸ் தெரியும்… ஒரு டீக்கடை போட்டார்… டீ குடிக்க வருபவர்களுக்கு செஸ் சொல்லி கொடுத்தார்.
கொஞ்சம் கொஞ்சமாக அந்த கிராமத்தில் செஸ் பரவியது. சாராயமும், கடத்தலும் ஒழிந்தது. மக்களின் நம்பிக்கையும், பொறுமையும் வளர்ந்தது… கவனம் அதிகரித்தது. கிராமமே மாறிவிட்டது.
இந்த கிராமத்தில் இருக்கும் 6000 மக்கள் தொகையில் 4000 பேருக்கு செஸ் தெரியும். எங்கே பார்த்தாலும் செஸ் விளையாடி கொண்டு இருக்கிறார்கள். இந்த கிராமம் குறித்து அறிந்த விஸ்வநாதன் ஆனந்த் இவர்களுக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறார்.
தற்போதைக்கு தமிழ்நாட்டுக்கும் உன்னிகிருஷ்ணன்கள் அவசியம் என்றே தோன்றுகிறது….

Tuesday 12 December 2017

Carmichael Coal Mine


கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கம் – திட்டமிட்டபடி எல்லாம் நடந்தால் ஆஸ்திரேலியாவின் மிக பெரிய நிலக்கரி சுரங்கமாகும். நம் நாட்டு ஆதானி குழுமம், வருடத்திற்கு 60 மில்லியன் டன் மட்டரக கரியெடுத்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும். இதற்குத்தான் தடங்கல் வந்துள்ளது.
மோடி ஒரு தடவை SBI சேர்மனையும், ஆதானியையும் ஆஸ்திரேலியாவிற்கே அழைத்து போய், இந்த சுரங்க ப்ராஜக்ட்டுக்காக ஆஸ்திரேலிய பிரதமரிடம் டீல் பேசினார். SBI சேர்மனும் இந்த திட்டத்திற்காக ஒரு பில்லியன் டாலர் (இன்றைய ரேட்டில் ஏறக்குறைய 6500 கோடி ரூபாய்) கடன் கொடுப்பதாக ஒப்புக்கொண்டார்.. ஒரு பிரதமர் ஒரு தனியார் ப்ராஜக்ட்டுக்காக இத்தனை முயற்சி எடுப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. (RSS கூட கண்டித்ததாக நினைவு)
இப்போது திட்டத்தை பார்ப்போம். ஆரம்பித்ததிலிருந்தே சுற்றுசூழலியலாளர்கள் இந்த திட்டத்தை எதிர்த்தார்கள். கார்மைக்கேலில் வெட்டியெடுக்கப்படும் கரி, இரண்டு துறைமுகங்கள் வாயிலாக ஏற்றுமதி செய்யப்படும். அப்பாட் பாயிண்ட் என்னும் துறைமுகத்தை மேம்படுத்த ஆதானி 183 கோடி டாலர்கள் (12000 கோடி ரூபாய்) முதலீடு செய்துள்ளது. ஆனால், துறைமுகத்தை ஆழம் செய்வதால் Great Coral Reef எனப்படும் பவளப்பாறைகளுக்கும், அங்கிருக்கும் உயிர்சங்கிலிக்கும் ஆபத்து விளைவிக்கும் என்பதால் திட்டம் முழுவதையும் செயல்படுத்த முடியவில்லை. துறைமுகத்திற்கே இந்த கதி என்றால் இப்போது சுரங்க ப்ராஜெக்ட்டுக்கே தலைவலி.
ஆஸ்திரேலிய அரசு இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் தீவிரமாக இருக்கிறது. (கார்மைக்கேல் அமைந்துள்ள குயின்ஸ்லேண்டின் பொருளாதார வளர்ச்சி அப்படி). சுற்றுசூழல் குறித்த எல்லா ஆட்சேபணங்களையும் நிராகரித்த அரசு, நீதிமன்றங்களில் இது குறித்த வழக்குகளை உடைக்க போராடி வருகிறது.

இப்போது, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இழுத்தடிப்பதால் கடுப்பான ஆஸ்திரேலிய அரசு, இனி வருங்காலங்களில் ஒரு திட்டம் குறித்து வழக்கு போட வேண்டுமென்றால், அந்த திட்டத்தால் நேரடியாக பாதிக்கப்படுபவர் மட்டும்தான் வழக்கு தொடுக்க முடியும் என்று சட்டதிருத்தம் கொண்டுவர உத்தேசித்துள்ளது. இதற்கும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த களேபரத்தில் அண்மையில் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த இரண்டு எம்.பி க்களை அரசு கைது செய்துள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க, நீதிமன்றங்களில் மட்டும் போராடினால் இவ்வளவு பெரிய திட்டத்தை முறியடிக்க முடியாது என்றுணர்ந்த சூழலியலாளர்கள் அடுத்த ஆயுதத்தை கையில் எடுத்தனர். அதாவது இந்த திட்டத்திற்கு எந்த வங்கியும் நிதியுதவி செய்யக்கூடாது என்று போராட்டம் நடத்தினர்.
காரணம், திட்டம் அவ்வளவு பெரிது. திட்டமதிப்பு 16.5 பில்லியன் டாலர்கள் (108000 கோடி ரூபாய்). கண்டிப்பாக கடன் வாங்காமல் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியாது. அதனால்தான், வங்கிகளை கடன் தர வேண்டாமென்று சூழலியலாளர்கள் வற்புறுத்த ஆரம்பித்தனர்.
தங்கள் பெயர் கெட்டு போய் விடுமென்று நினைத்த ஆஸ்திரேலிய வங்கிகள், கடன் தருவதிலிருந்து பின்வாங்கிவிட்டன. ஆதானி, அடுத்ததாக சீன வங்கிகளை அணுகியது. இப்போது அவர்களும் பல காரணங்களை சொல்லி பின்வாங்கி விட்டனர்.
ஆஸ்திரேலியாவின் பவழ பாறைகள் உலக புகழ் பெற்றது. அதை சிதைக்கும் இந்த திட்டம், கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. பார்க்கலாம், என்ன நடக்கிறது என்று.

Sunday 10 December 2017

‘Power of Money’ by Adam Khoo


Recently, someone came up to me on a plane to KL and looked rather shocked. He asked, ‘How come a millionaire like you is traveling economy?’ My reply was, ‘That’s why I am a millionaire. ‘ He still looked pretty confused.
This again confirms that greatest lie ever told about wealth (which I wrote about in my latest book ‘Secrets of Self-Made Millionaires’ ). Many people have been brainwashed to think that millionaires have to wear Gucci, Hugo Boss, Rolex, and sit on first class in air travel.
This is why so many people never become rich because the moment that earn more money, they think that it is only natural that they spend more, putting them back to square one.
The truth is that most self-made millionaires are frugal and only spend on what is necessary and of value. That is why they are able to accumulate and multiply their wealth so much faster.
Over the last 7 years, I have saved about 80% of my income while today I save only about 60% (because I have my wife, mother in law, 2 maids, 2 kids, etc. to support). Still, it is way above most people who save 10% of their income (if they are lucky).
I refuse to buy a first class ticket or to buy a $300 shirt because I think that it is a complete waste of money. However, I happily pay $1,300 to send my 2-year old daughter to Julia Gabriel for Speech and Drama c lasses without thinking twice.
When I joined the YEO (Young Entrepreneur’ s Organization)a few years back (YEO is an exclusive club open to those who are under 40 and make over $1m a year in their own business), I discovered that those who were self-made thought like me. Many of them with net worth well over $5m,travelled economy class and some even drove Toyotas and Nissans – not Audis, Mercs, BMWs.
I noticed that it was only those who never had to work hard to build their own wealth (there were also a few ministers’ and tycoons’ sons in the club) who spent like there was no tomorrow. Somehow, when you did not have to build everything from scratch, you do not really value money. This is precisely the reason why a family’s wealth (no matter how much) rarely lasts past the third generation.
Thank God my rich dad foresaw this terrible possibility and refused to give me a cent to start my business.
Then some people ask me, ‘What is the point in making so much money if you don’t enjoy it?’ The thing is that I don’t really find happiness in buying branded clothes, jewelry or sitting in first class. Even if buying something makes me happy it is only for a while; it does not last. Material happiness never lasts, it just gives you a quick fix. After a while you feel lousy again and have to buy the next thing which you think will make you happy. I always think that if you need material things to make you happy, then you live a pretty sad and unfulfilled life..
Instead, what makes me happy is when I see my children laughing and playing and learning so fast. What makes me happy is when I see my companies and trainers reaching more and more people every year in so many more countries.
What makes me really happy is when I read all the emails about how my books and seminars have touched and inspired someone’s life. What makes me really happy is reading all your wonderful posts about how this blog is inspiring you. This happiness makes me feel really good for a long time, much much more than what a Rolex would do for me.
I think the point I want to put across is that happiness must come from doing your life’s work (be it teaching, building homes, designing,trading, winning tournaments etc.) and the money that comes is only a by-product. If you hate what you are doing and rely on the money you earn to make you happy by buying stuff, then I think that you are living a life of meaninglessness.

Monday 4 December 2017

Fitch - GDP Forecast


ஃபிட்ச் ரேட்டிங் ஏஜென்சி இந்தியாவின் GDP முன்கணிப்பை (Forecast) குறைத்துள்ளது. இத்தனைக்கும் கடந்த காலாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி சற்றே முன்னேற்றம் காட்டியது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு ஜி.டி.பி அதிகரிக்காததால் முன்கணிப்பை குறைத்ததாக ஃபிட்ச் கூறியுள்ளது.
பொருளாதாரம் சிறிது சிறிதாக இன்னும் இரண்டு வருடங்களில் சரியாகும் என்று ஃபிட்ச் கூறுகிறது. நவம்பர் நடுவில் வந்த மூடிஸ் ரேடிங்கை விட ஃபிட்ச் கணிப்பே சரியாக இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.
ஒரு உதாரணம் சொல்கிறேன். நவம்பர் மாத PV (Passenger Vehicles) விற்பனை அதிகரித்திருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், பல கம்பெனிகளுக்கு PV விற்பனை இன்னும் 2015 நவம்பர் விற்பனை அளவிற்கு கூட வரவில்லை. 2016 நவம்பரில் டீமானிடைஸேஷன் காரணமாக விற்பனை படுத்து விட்டது. 2017 நவம்பர் விற்பனை போன வருடத்தை காட்டிலும் அதிகமே ஒழிய 2015 விற்பனையை விட குறைவுதான். வளர்ச்சி Lower base காரணமாக ஏற்பட்டதே ஒழிய, உண்மையான வளர்ச்சியின் காரணமாக ஏற்பட்டதாக தெரியவில்லை.
வரும் மாதங்களில் அரசாங்கம் பொருளாதாரம் வளர்ந்துவிட்டது என்று சொல்லும் போதெல்லாம் 2015, 2016ம் ஆண்டோடு ஒப்பிட்டு பார்க்கவேண்டும். காரணம் டீமானிடைஸேஷனால் கடந்த ஒரு வருடத்தில் அனைத்து நம்பர்களும் விழுந்துவிட்டன. அதனால், பொருளாதார வளர்ச்சி எனும் போதெல்லாம் இந்த Lower Base Effect – ஐ மனதில் கொள்ளவேண்டும்.
முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தியாவின் வளர்ச்சி குறைய டீமானிடைஸேஷனும், ஜி.எஸ்.டி வரிவிதிப்பும் ஒரு காரணம் என்று ஃபிட்ச் கூறியுள்ளதுதான்.
இப்படி டீமானிடைஸேஷன் தவறு என்று பலரும் கூறிவிட்ட நிலையில் பிரதமரும், நிதி அமைச்சரும் மட்டும் சரியான நடவடிக்கை என்று கூறி வருவது முழு பூசணிக்காயை மறைக்க முயலுவதாகவே தோன்றுகிறது. பிரதமரும், நிதி அமைச்சரும் தவறுகளை ஒப்பு கொள்வதால் மட்டுமே மக்களுக்கு அவர்கள் மேல் நம்பிக்கை வரும்.