நாட்டிலே முதன்முறையாக நேரடி வரி வசூல் 10 லட்சம் கோடியை
கடந்துள்ளது. நேரடி வரி வசூலை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை குறிக்கும் ஒரு
அளவீடாக கொள்ளலாம். 2000-01 –ல் நேரடி வரி வசூல் 68000 கோடிகள்…. இந்த 17
வருடங்களிலே 14 மடங்கிற்கு மேலே வரிவசூல் உயர்ந்துள்ளது.
தேர்தல் காலம் நெருங்குவதால் ஒரு பெர்ஃபாமன்ஸ் அப்ரைஸல் செய்வோம்.
இணைக்கப்பட்டுள்ள படத்திலே வருடவாரியாக நேரடி வரி வசூலும், வளர்ச்சி விகிதமும்
கொடுக்கப்பட்டுள்ளன. பச்சையில் இருப்பது UPA ஆட்சிகாலம். சிகப்பில்
இருப்பது NDA ஆட்சிகாலம்.
UPA முதல் நான்கு வருடங்களில் அபாரமான வளர்ச்சி விகிதத்தை
பாருங்கள். பின்னர் 2008ல் உலக பொருளாதாரம் வீழ்ந்த காரணத்தினால் வளர்ச்சியும்
குறைந்தது. 2004ல் இருந்து (1.05 லட்சம் கோடி) 2014ல் (6.38 லட்சம் கோடி) வரை
வளர்ச்சி விகிதம் (CAGR) 17.83%. அதாவது ஒவ்வொரு வருடமும் 17.83%
இப்போது மோடி - ஜேட்லி கூட்டணியை கவனிப்போம். ஆட்சிக்கு வந்த முதல்
வருடமே வளர்ச்சி குறைந்தது… இரண்டாவது வருடம் இன்னும் குறைவு. மூன்றாவது
வருடத்தில் 14.16% வளர்ச்சி காண்பித்தாலும், வருவாயில் 30000 கோடிகள் IDS
scheme-ல் (கருப்பு பணத்தை தானே அறிவிக்கும் திட்டம்) வந்தது. அதை கழித்தால் 10%
வளர்ச்சிதான். இந்த வருடம்தான் நேரடி வரி வருவாய் உயர்ந்துள்ளது.
இந்த நான்கு வருடத்தின் CAGR 11.93%. UPA-வின் 10 வருட காலத்தில்
17.83%...!
No comments:
Post a Comment