பறவைகள்
கூட்டம் கூட்டமாக, டிசைன் டிசைனாக பறப்பதை முர்முரேஷன் என்பார்கள். கூட்டம் என்றால்
பெருங்கூட்டம்தான்… ஆயிரக்கணக்கான பறவைகள் ஒன்று சேர்ந்து பறக்கும்.
இத்தனை
பறவைகள் ஒன்று சேர்ந்து, வானத்திலே அழகாக கோலம் போடுவதை போன்று உருவாக்கும் டிசைன்கள்
ஒரு நொடியில் மாறிவிடுவது கண்களுக்கு விருந்தாகும்.
பில்பர்
என்னும் புகைப்படக்கலைஞர் ஒருவர், ஸ்பெய்ன் நாட்டில் இப்படிப்பட்ட முர்முரேஷன் படங்களை
எடுத்தார். படம் எடுக்கும் போது எப்பேற்ப்பட்ட பொக்கிஷத்தைப் படம் பிடித்திருக்கிறோம்
என்று அவருக்கே தெரியாது. காரணம், கூட்டமாக பறக்கும் பறவைகள் நொடிக்கொருதரம் வடிவங்களை
மாற்றிக் கொள்ளும்.
பின்னர்,
வீட்டிற்கு வந்து படங்களை கம்யூட்டரில் அப்லோட் செய்து பார்த்து வியந்தார். இந்தப்
படங்கள் அவருக்குப் புகைப்படப்போட்டிகளில் பரிசுகளைப் பெற்று தருகிறது. நீங்களும் பார்த்து
ரசியுங்கள்.
No comments:
Post a Comment